சர்வதேச கலைப் போட்டி: இந்திய மாணவர்கள் 4 பேர் வெற்றி
சர்வதேச கலைப் போட்டி: இந்திய மாணவர்கள் 4 பேர் வெற்றி
UPDATED : மார் 14, 2013 12:00 AM
ADDED : மார் 14, 2013 08:32 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த, சர்வதேச கலை போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த, நான்கு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின், ஸ்பேஸ் பவுண்டேஷன் சார்பில், சர்வதேச கலை போட்டிகள், மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில், 45 நாடுகளைச் சேர்ந்த, 4,700 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல போட்டிகளில், எல்.கே.ஜி., முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில், 36 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில், நான்கு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, "ஆர்ட் ஏசியா" பள்ளியைச் சேர்ந்த பாவ்ய மித்ரா என்ற மாணவி, இரண்டாம் பரிசை வென்றார். பஞ்சாப் மாநிலம் மொகாலி நகரைச் சேர்ந்த, யாதவீந்திர பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த, மாங்கிரீத் நாரங், மூன்றாம் பரிசை வென்றார்.
மொகாலியின் யாதவீந்திர பள்ளியை சேர்ந்த ஜாஸ்மின், மேற்குவங்க மாநிலம், சதுரங்க கலை மையத்தை சேர்ந்த, பாயல் சாகா ஆகியோரும், இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள், அமெரிக்காவிலுள்ள கொலாராடோவில், அடுத்த மாதம் நடைபெற உள்ள, 29வது தேசிய விண்வெளி கருத்தரங்கில் வழங்கப்படும்.
