தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யாதாவா கல்லூரிக்கு தனி அலுவலரை நியமிக்க உத்தரவு

யாதாவா கல்லூரிக்கு தனி அலுவலரை நியமிக்க உத்தரவு

யாதாவா கல்லூரிக்கு தனி அலுவலரை நியமிக்க உத்தரவு


UPDATED : மார் 16, 2013 12:00 AM

ADDED : மார் 16, 2013 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 16, 2013 12:00 AM ADDED : மார் 16, 2013 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: "மதுரை யாதவா கல்லூரி நிர்வாகத்தில் பிரச்னைகள், குழப்பங்களுக்கு தீர்வு காண தனி அலுவலரை நியமிக்க, உயர்கல்வி செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை யாதவா கல்வி நிதி, 1962 ல் சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இதன்கீழ், யாதவா கல்லூரி செயல்படுகிறது. நிர்வாகிகள் தேர்தல் 2000 நவம்பரில் நடந்தது. கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளராக ஏ.ஆர்.சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் 2003ல் முடிந்தது. சில வழக்குகள் காரணமாக, அடுத்ததாக தேர்தல் நடக்கவில்லை.

நவநீதகிருஷ்ணன் தலைமையில், பொதுக்குழு நடந்தது. தற்காலிக செயலாளராக நாராயணன் தேர்வு செய்யப்பட்டார். கூட்ட நடவடிக்கை குறிப்பில், பொதுக்குழு என குறிப்பிடப்படவில்லை. தீர்மானங்களில் பல குழப்பங்கள் உள்ளதாக, சிலர் வழக்கு தொடர்ந்தனர்.சிலர் செயலாளர் பதவிக்கு உரிமை கொண்டாடினர். நவநீதகிருஷ்ணனை செயலாளராக 2009 ல், கல்லூரிக் கல்வி இயக்குனர் அங்கீகரித்தார். இதை எதிர்த்தும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

நவநீதகிருஷ்ணன் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக, சிலர் பதிவுத்துறை தலைவருக்கு( ஐ.ஜி.,) புகார் அனுப்பினர். கல்லூரியை நிர்வகிக்க, தனி அலுவலரை நியமிக்க பதிவுத்துறை ஐ.ஜி., பரிந்துரைத்து ஐகோர்ட்டில் 2012 ல் அறிக்கை தாக்கல் செய்தார்.

கல்லூரி நிர்வாக பிரச்னை தொடர்பாக 12 வழக்குகளையும் ஒருங்கிணைத்து, நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு: தொடர் சச்சரவுகளால், கல்லூரி மற்றும் சங்க நிர்வாகத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டது. சிறிய தீப்பொறி, பெரும் நெருப்பாக உருமாறி விட்டது. கல்லூரியை நிர்வகிக்கும் குழுவிற்கு பதில், தனி அலுவலரை நியமிக்க பரிந்துரைத்து பதிவுத்துறை ஐ.ஜி., ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். கோஷ்டி பிரச்னைக்கு முடிவு கட்டவேண்டும். கோஷ்டி உறுப்பினர்களின் செயல் கண்டிக்கத்தக்கது. மெய்யாதவ் என்பவர் அச்சுறுத்தும் வகையில், நீதிபதிகளுக்கே கடிதம் எழுதியுள்ளார். சிலர் புனை மற்றும் கற்பனையான பெயர்களில் மொட்டை கடிதங்கள் எழுதியுள்ளனர். பதிவுத்துறை அதிகாரிகள் பற்றி குறிப்
பிட்டுள்ளனர். அவை, ஒரேமாதிரியாக உள்ளன. இது, இக்கோர்ட்டின் கவனத்தை திசை திருப்பும் செயல். கடிதங்களில் நியாயமான காரணங்களை குறிப்பிடவில்லை.

ஐ.ஜி.,பரிந்துரைப்படி, உயர்கல்வித்துறை செயலாளர் 2 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில், சிவில் கோர்ட் சுதந்திரமாக செயல்பட அதிகாரம் அளிக்கப்படுகிறது. சிவில் கோர்ட்டில், வழக்கின் முடிவிற்கு ஏற்ப, உயர்கல்வித்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்கலாம். கல்லூரி சுயநிதி பிரிவு விவகாரத்தில், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் தலையிடக்கூடாது. அவர், சில ஊழியர்கள் கல்லூரிக்குள் நுழைய விதித்த தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஐ.ஜி.,பரிந்துரைப்படி கல்லூரிக்கு தனி அலுவலரை நியமிக்க, உயர் கல்வித்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us