தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்காவின் அடுத்த அதிபர் சட்டம் படித்த பராக் ஒபாமா!

அமெரிக்காவின் அடுத்த அதிபர் சட்டம் படித்த பராக் ஒபாமா!

அமெரிக்காவின் அடுத்த அதிபர் சட்டம் படித்த பராக் ஒபாமா!


UPDATED : நவ 06, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவ., 4ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும்(47), குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைனும்(72) போட்டியிட்டனர்.
சிறிய கட்சிகளின் சார்பில் சக்பால்ட்வின், சிந்தியா மெக்கினி, சுயேச்சை வேட்பாளர் ரால்ப் நடார் ஆகியோரும் களத்தில் இருந்தனர். இருப்பினும், பராக் ஒபாமா மற்றும் ஜான் மெக்கைன் இடையே தான் கடும் போட்டி நிலவியது.
அமெரிக்க அதிபரை மக்கள் நேரடியாக ஓட்டளித்து தேர்ந்தெடுப்பதில்லை. ஒவ்வொரு மாகாணத்திலும் மாநில மக்கள்தொகை அடிப்படையில், தேர்தல் சபை உறுப்பினர்கள் உண்டு. அந்த உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 538. இவற்றில், 270 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுபவரே அமெரிக்க அதிபராவார்.
ஆனால், பராக் ஒபாமா எதிர்பார்த்ததை விட அதிகமாக, 338 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கைன், 159 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் 44வது அதிபராகிறார் ஒபாமா.
அத்துடன், அமெரிக்காவின் 232 ஆண்டுகால வரலாற்றில் முதல் கருப்பின அதிபர் என்ற பெருமையை பெறுகிறார். கென்யாவைச் சேர்ந்த தந்தைக்கும், அமெரிக்க தாய்க்கும் பிறந்த பராக் ஒபாமாவுக்கு மிச்சேல் என்ற மனைவியும், மாலியா, சாஷா என்ற மகள்களும் உள்ளனர். தற்போது இல்லினாய்ஸ் மாகாண கவர்னராக இருக்கும் ஒபாமா, சட்டம் படித்தவர்.
‘புதிய மாறுதல்’ என்று அமெரிக்கர்களுக்கு அழைப்பு விடுத்து வெற்றி பெற்ற இவருக்கு, துணை அதிபராக உதவப் போகும் ஜோ பிடன் வெளிவிவகாரக் கொள்கைகளில் நிபுணர். கடந்த 2004ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ஒகியோ, புளோரிடா, வெர்ஜினியா, ஐயோவா, நியூ மெக்சிகோ, நிவேடா மற்றும் கொலராடோ ஆகிய மாகாணங்களில் அதிபர் புஷ் வெற்றி பெற்றிருந்தார். அவர் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்.
ஆனால், இம்முறை அந்த மாகாணங்களில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒபாமாவுக்கு ஆதரவாக ஓட்டுக்கள் விழுந்துள்ளன. அத்துடன் ஜனநாயக கட்சியினரின் ஆதிக்கம் குறைந்த மாகாணம் என நம்பப்படும் பென்சில்வேனியாவிலும் ஜான் மெக்கைனுக்கு குறைவான ஓட்டுக்களே விழுந்தன.
ஜான் மெக்கைன் ஆட்சிக்கு வந்தால், அதிபர் புஷ் ஆட்சியே மூன்றாவது முறை தொடர்வதாக கருதலாம். அவரின் கொள்கைகளையே ஜான் மெக்கைன் பின்பற்றுவார் என, ஒபாமா பிரசாரம் செய்தார். அந்தப் பிரசாரத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போதைய அதிபர் புஷ்சின் பதவி, 2009ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதியுடன் முடிவடைகிறது. அன்றைய தினம் ஒபாமா அதிபராக பதவியேற்பார்.
அமெரிக்காவில் இன ரீதியாக சமத்துவம் உருவாக வேண்டும் என, சிவில் உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர்சிங் விரும்பினார். அவரின் விருப்பம், ஒபாமாவின் வெற்றி மூலம் நிறைவேறியுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் சிகாகோவில் தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பராக் ஒபாமா கூறியதாவது:
அமெரிக்காவில் எல்லாம் நடக்குமா, ஜனநாயகத்தின் கனவுகள் அங்கே இனி நனவாகுமா என்ற சந்தேகம் கொண்டவர்களுக்கு இந்த வெற்றி நல்ல பதிலை தந்துள்ளது. நமது ஜனநாயகத்தின் அதிகாரம் பற்றி கேள்வி எழுப்பியவர்களுக்கு எல்லாம் இந்த இரவில் பதில் கிடைத்துள்ளது. இவ்வாறு ஒபாமா கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங் உட்பட உலக தலைவர்கள் பலரும் ஒபாமாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us