ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட அனுமதி
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட அனுமதி
UPDATED : மார் 18, 2013 12:00 AM
ADDED : மார் 18, 2013 09:55 AM
தமிழக அரசின் செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ், 1,300 ஆதிதிராவிடர் நல விடுதிகளும், 42 பழங்குடியினர் விடுதிகளும் உள்ளன. மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பால், வாடகை கட்டடங்களில் இயங்கும் விடுதிகளில், அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.
இதை கருத்தில் கொண்டு, வாடகை கட்டடங்களில் இயங்கும் அனைத்து விடுதிகளுக்கும், சொந்த கட்டடங்கள் கட்டப்படும் என, அரசு அறிவித்தது. அதன்படி, இந்தாண்டு வாடகை கட்டடங்களில் இயங்கும், 44 ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் விடுதிகளுக்கு, மொத்தம், 35.04 கோடி ரூபாய் செலவில், சொந்த கட்டடம் கட்ட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
இதில், மலைப் பகுதிகளில், விடுதி ஒன்றுக்கு, 88.53 லட்சம் ரூபாய் செலவில், 50 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட மூன்று விடுதிகளும், மற்ற பகுதிகளில், 78.99 லட்சம் ரூபாய் செலவில், 50 மாணவர்கள் தங்கும் வசதியுடைய, 41 விடுதிகளும் கட்டப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
