தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி: பட்டதாரிகள் ஏமாற்றம்

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி: பட்டதாரிகள் ஏமாற்றம்

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி: பட்டதாரிகள் ஏமாற்றம்


UPDATED : மார் 19, 2013 12:00 AM

ADDED : மார் 19, 2013 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2013 12:00 AM ADDED : மார் 19, 2013 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லாவரம்: சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக, இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, முகப்பேர், கோல்டன் காலனியைச் சேர்ந்தவர்கள், நூருல் ஹபீஸ் (46), நூருல் நிஷா (40), தம்பதியர். சில மாதங்களுக்கு முன், அலைபேசி மூலம் பல இளைஞர்களை தொடர்பு கொண்ட இவர்கள், தாங்கள் சிங்கப்பூரில் ஓட்டல் நடத்துவதாகவும், அதற்காக சென்னையில் இருந்து ஆட்களை சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினர். இவர்களின் வார்த்தைக்கு மயங்கிய, வேலை இல்லாத பல பட்டதாரி இளைஞர்களை, சென்னையில விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து, நூருல் அபீஸ் தம்பதி கூட்டம் நடத்தியது. அப்போது, இளைஞர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை, அவர்களிடம் ஒப்படைத்தனர்.

விசா, விமான டிக்கெட் ஆகியவற்றை தயார் செய்துவிட்டு, மீண்டும் அழைப்பதாக, தம்பதி கூறியது. மேலும், இதற்கான செலவாக, 1.80 லட்சம் ரூபாயை தர வேண்டும் எனவும் தெரிவித்தது. இதன்படி, இளைஞர்களை அழைத்து, "சீல்&' வைக்கப்பட்ட ஒரு தபாலை கொடுத்து, அதில், விமான டிக்கெட், விசா இருப்பதாக தெரிவித்தனர். விமான நிலைய வளாகத்தில் இருக்கும், தங்கள் நிறுவன ஊழியரிடம் இந்த தபாலை கொடுத்தால், அவர் அதை பிரித்து, விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்து, சிங்கப்பூர் அழைத்து செல்வார் என்றும் கூறி, பணத்தை பெற்றனர். பணத்தை கொடுத்துவிட்டு, விமான நிலையம் சென்ற இளைஞர்கள், நூருல் ஹபீஸ் கூறியதை போல அங்கு யாரும் இல்லாததால், அதிர்ச்சி அடைந்தனர். தபாலை பிரித்து பார்த்தபோது, தங்கள் பாஸ்போர்ட் மட்டுமே இருந்ததை கண்டு, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கொடுத்த புகாரின்படி, பல்லாவரம் போலீசார் வழக்கு பதிந்து, அலைபேசி எண்ணின் அடிப்படையில், தேடுதல் வேட்டை நடத்தினர். நூருல் ஹபீஸ் தம்பதி, முகப்பேரில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. போலீசார் நேற்று அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us