அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு புதிதாக இடம் ஒதுக்கீடு
அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு புதிதாக இடம் ஒதுக்கீடு
UPDATED : மார் 19, 2013 12:00 AM
ADDED : மார் 19, 2013 12:48 PM
சேலம்: சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில், இரண்டு துறைகளில், புதிதாக, ஏழு மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை அகில இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியுள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில், 22 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 17 மருத்துவக்கல்லூரிகளில், மாணவர்களுக்கு கல்வியுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், மருத்துவக்கல்லூரி வாரியாக, மாணவர் சேர்க்கை இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில், 75 மாணவ, மாணவியர் எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ்., படித்து வருகின்றனர். சர்ஜரி, குழந்தைகள் நலம், ஆர்த்தோ உள்ளிட்ட, 17 துறைகளில், அவர்களுக்கு படிப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
தற்போது அகில இந்திய மெடிக்கல் கவுன்சில், மயக்கவியல் துறையில் மாணவர் சேர்க்கைக்கான நான்கு இடத்தையும், மகப்பேறு மருத்துவத்தில், மூன்று இடத்தையும் உருவாக்கியுள்ளது. தொலைதூர கல்வி மூலம் இப்படிப்பை, மாணவர்கள் தொடர முடியும், என மருத்துவக்கல்லூரி டீன் வள்ளிநாயகம் தெரிவித்தார்.
