தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வளர்ப்புப் பிராணிகள் பாதுகாப்பு: சாதித்த மாணவர்களுக்கு பரிசு

வளர்ப்புப் பிராணிகள் பாதுகாப்பு: சாதித்த மாணவர்களுக்கு பரிசு

வளர்ப்புப் பிராணிகள் பாதுகாப்பு: சாதித்த மாணவர்களுக்கு பரிசு


UPDATED : மார் 19, 2013 12:00 AM

ADDED : மார் 19, 2013 01:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2013 12:00 AM ADDED : மார் 19, 2013 01:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரியில் வளர்ப்புப் பிராணிகளை பாதுகாப்பது குறித்து நடந்த போட்டிகளில் சாதித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.

சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில், "கைண்ட்னஸ் கிட்ஸ்" என்ற தலைப்பில், வளர்ப்புப் பிராணிகளுக்கு அன்பு செலுத்தி பாதுகாப்பதன் அவசியம் குறித்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருகட்டமாக, நீலகிரி மாவட்டத்தில், மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மரம் வளர்ப்பதன் அவசியம், வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை அன்பு செலுத்தி பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து, மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அவர்களது படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டன.  இதில் பங்கேற்ற 28 பள்ளிகளில் 23 பள்ளிகள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தின. நிறைவாக, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஓவியப்போட்டியில், மிதுன், மும்தாஜ், ரத்தீஷ்கா ஆகியோர், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். கட்டுரைப் போட்டியில், ஹர்ஷத் முதலிடத்தையும், தீபிகா இரண்டாம் இடத்தையும், நதியா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

கோத்தகிரி ரோட்டரி கிளப் வளாகத்தில் சாதித்த மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடந்தது. சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி நிறுவன முதன்மை நிர்வாக அலுவலர் பிரசாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தார். கோத்தகிரி ரோட்டரி சங்க தலைவர் பேராசிரியர் ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சாதித்த மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

இதில், சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு, நீலகிரி மாவ­ட்ட சுற்றுச்சூழல் முதன்மை பயிற்சியாளர் லட்சுமி நாராயணன் உட்பட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us