தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்காவில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் தற்கொலை

அமெரிக்காவில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் தற்கொலை

அமெரிக்காவில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் தற்கொலை


UPDATED : மார் 20, 2013 12:00 AM

ADDED : மார் 20, 2013 07:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 20, 2013 12:00 AM ADDED : மார் 20, 2013 07:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்லாண்டோ: அமெரிக்க பல்கலை கழகத்தில், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் தங்கியிருந்த தமிழர், தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவின், ஆர்லாண்டோ பகுதியில் உள்ள புளோரிடா பல்கலை கழகத்தில் படித்தவர் ஜேம்ஸ் ஆலிவர் சீவகுமாரன்,30. கடந்த, 2010ம் ஆண்டு, வர்த்தக மேலாண்மை படிப்பில் சேர்ந்த சீவகுமாரன், பல்கலைகழக விடுதியில் தொடர்ந்து தங்கியிருந்தார். விடுதி கட்டணத்தையும் அவர் கட்டவில்லை.

இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு, பல்கலை கழக விடுதியின் எச்சரிக்கை மணியை சீவகுமாரன் ஒலிக்க செய்தார். இதனால், தூங்கி கொண்டிருந்த விடுதி மாணவர்கள் அலறியடித்து கொண்டு எழுந்து பாதுகாப்பான இடத்துக்கு ஓடினர்.

சீவகுமாரன் அறையில் துப்பாக்கியும், வெடிகுண்டுகளையும் பார்த்த அவருடன் தங்கியிருந்த மாணவர், குளியறைக்குள் சென்று தாழிட்டு கொண்டார். அதுமட்டுமல்லாது, போலீசுக்கும் தகவல் கொடுத்தார்.போலீசார் விரைந்து வந்து, சீவகுமாரன் தங்கியிருந்த அறையை திறக்க முயன்றனர். ஆனால், அவர் உள்பக்கம் பூட்டியிருந்தார்.

பின்பக்க வழியாக அவரது அறைக்குள் சென்ற போலீசார், சீவகுமாரன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டனர். அவருக்கு பக்கத்தில் இருந்த, நவீன துப்பாக்கியையும், வெடிகுண்டுகளையும், வெடிமருந்து பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில், 500க்கும் அதிகமான மாணவர்கள் தங்கியிருந்தனர். எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்து, வெளியே ஓடி வரும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த சீவகுமாரன் திட்டமிட்டிருந்தாக, அவர் எழுதி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின், தனது முடிவை மாற்றிக்கொண்ட சீவகுமாரன் தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். "சீவகுமாரன் தாக்குதல் நடத்தியிருந்தால், ஏராளமானவர்கள் பலியாகியிருப்பார்கள்" என, பல்கலை விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us