பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு ஒரு கோடியில் வகுப்பறை கட்டடம்
பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு ஒரு கோடியில் வகுப்பறை கட்டடம்
UPDATED : மார் 22, 2013 12:00 AM
ADDED : மார் 22, 2013 09:40 AM
திருப்போரூர்: திருப்போரூர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, நபார்டு திட்டத்தில், 1.1 கோடி ரூபாய் மதிப்பில், வகுப்பறை கட்டும் பணி துவங்கியது.
திருப்போரூர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 850 மாணவிகள் படிக்கின்றனர். வரும் கல்வி ஆண்டில், அப்பள்ளியில், 11ம் வகுப்பில், கலைப்பிரிவு புதிதாக துவக்கப்பட உள்ளது. மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், பல வகுப்புகளை பிரிக்க வேண்டியுள்ளது.
ஆனால், பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்கள் இட நெருக்கடியில் பயின்று வருகின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு தீர்வாக, பள்ளிக்கு, கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது.
அதைத் தொடர்ந்து, 12 வகுப்பறைகள் மற்றும் ஒரு ஆய்வக கட்டடம் கட்டுவதற்கு, நபார்டு திட்டத்தில், 1.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், தற்போது துவங்கப்பட்டுள்ளன.
