தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பகுதிநேர பி.இ.,-பி.டெக்., படிப்பு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பம்

பகுதிநேர பி.இ.,-பி.டெக்., படிப்பு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பம்

பகுதிநேர பி.இ.,-பி.டெக்., படிப்பு ஏப்ரல் 1 முதல் விண்ணப்பம்


UPDATED : மார் 23, 2013 12:00 AM

ADDED : மார் 23, 2013 09:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 23, 2013 12:00 AM ADDED : மார் 23, 2013 09:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், பகுதிநேர பி.இ.,-பி.டெக்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. எஸ்.சி.,-எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவு மாணவ, மாணவியர், 150 ரூபாய்க்கும், இதர பிரிவு மாணவர்கள், 300 ரூபாய்க்கும், "செயலர், பகுதிநேர பி.இ.,-பி.டெக்., சேர்க்கை, கோவை தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கோவை" என்ற பெயரில், டி.டி., எடுத்து வழங்கி, விண்ணப்பங்களை பெறலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். மாணவர்கள், மே மாதம் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். இதற்கான கடிதம், மாணவர்களுக்கு அனுப்பப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் அரசு பொறியியல் கல்லூரி, கோவை; அரசு பொறியியல் கல்லூரி,சேலம்; அரசு பொறியியல் கல்லூரி, நெல்லை; அழகப்பா பொறியியல் கல்லூரி, காரைக்குடி; பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, வேலூர்; அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர்; பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரி, கோவை தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கோவை; தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை; தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us