அழகப்பா பல்கலையின் தொலை நிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் வினியோகம்
அழகப்பா பல்கலையின் தொலை நிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் வினியோகம்
UPDATED : மார் 23, 2013 12:00 AM
ADDED : மார் 23, 2013 10:31 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: அழகப்பா பல்கலை., தொலை தூர கல்வியில் பயில விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள பல்கலைக் கழக கல்வி மையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இம்மாதம் 30க்குள் அனுப்ப வேண்டும். பி.பி.ஏ., பி.ஏ., பி.காம்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ். டபிள்யூ., எம்.எஸ்.சி., படிப்பிற்கான சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.
உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் 30 சதவீதமும், ஒரே நேரத்தில் சேரும் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 15 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும், என்று பொது மேலாளர் சத்திய சேகரன் தெரிவித்துள்ளார்.
