தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு


UPDATED : மார் 24, 2013 12:00 AM

ADDED : மார் 24, 2013 06:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2013 12:00 AM ADDED : மார் 24, 2013 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தினமலர் நாளிதழ் சார்பில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான, வழிகாட்டி நிகழ்ச்சி, மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் மார்ச் 25ம் தேதி துவங்குகிறது.

மாணவர்கள் எதிர்காலம் கருதி, பிளஸ் 2க்கு பின் எவ்வகை உயர் படிப்புக்களை தேர்வு செய்யலாம் என்று வழிகாட்ட, ஆண்டுதோறும் தினமலர் சார்பில், வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்தாண்டு தினமலர் மற்றும் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி, ஆராய்ச்சி நிறுவன பல்கலை இணைந்து, மார்ச் 25 (திங்கள்) முதல் 27 (புதன்) வரை இந்நிகழ்ச்சியை நடத்துகிறது.

பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள், கண்காட்சியில் இடம்பெறுகின்றன. மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, கல்வி கண்காட்சியை திறந்து வைக்கிறார். கருத்தரங்கை, சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி, ஆராய்ச்சி நிறுவன பல்கலை தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.

கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள், காலை 10.30 முதல் இரவு 7 மணி வரை இடைவெளியின்றி திறந்திருக்கும். தினமும் காலை (10.00-11.30), மாலை (4.00-5.30) என இரு அமர்வுகளாக கருத்தரங்கு நடக்கிறது.

கருத்தரங்கில், பல்வேறு தலைப்புகளில் கல்வியாளர்கள், துறை வல்லுனர்கள் பலர், மாணவர்களுக்கான பயனுள்ள விஷயங்களை பேசுகின்றனர். முதல் நாள் (மார்ச் 25) நிகழ்ச்சியில், "சிவில் சர்வீஸ் தேர்வு"களில் வெற்றி பெறுவது எப்படி என, கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு விவரிக்கிறார்.

"வாழ்வில் வெற்றியாளராக இருப்பது எப்படி" என்று தன்னம்பிக்கை பேச்சாளரும் நடிகருமான ஆஜய் ரத்னம் பேசுகிறார். "மொழிப்பாடங்களை தேர்ந்தெடுத்து நல்ல எதிர்காலம் அமைப்பது எப்படி" என விளக்குகிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்.

"பயோ டெக்னாலஜி மற்றும் பயோ இன்ஜினியரிங்" படிப்புகளில் எதிர்காலம் பற்றி சொல்கிறார் ராம.வைத்தியநாதன். "கடல்சார் அறிவியல் மற்றும் கடல் ஆய்வு கல்வி" வாய்ப்புகள் பற்றி விளக்குகிறார் நரசய்யா.

"அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங்" படிப்பின் எதிர்காலம் பற்றி கூறுகிறார் தினேஷ்குமார். "வெளிநாட்டில் மேற்படிப்புக்கான சாதக பாதகங்கள்" பற்றி அலசுகிறார் பால் செல்லக்குமார்.

இரண்டாம் நாளில் (மார்ச் 26), "என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எதை படிக்கலாம், அதை எப்படி படிக்க வேண்டும்" என விளக்குகிறார் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி. கைநிறைய சம்பாதிக்க செய்யும் "சி.ஏ.,/ ஏ.சி.ஏஸ்., / ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்புகள்" பற்றி விவரிக்கிறார் சரவண பிரசாத்.

உலகுக்கே உணவிடும் "வேளாண் அறிவியல்" குறித்து பேசுகிறார் சுதாகர். "கால்நடை அறிவியல் கல்வியின் எதிர்காலம்" பற்றி கற்றுத் தருகிறார் டாக்டர் முருகானந்தம். "ஊடகத்துறை படிப்புகள்" பற்றி விவரிக்கிறார் பேராசிரியர் மணிகண்டன்.

சுகாதாரம், அறிவியல் இரண்டையும் இணைக்கும் "ஹெல்த் சயின்ஸ்" படிப்புகள் பற்றி விவரிக்கிறார் டாக்டர் வாசுதேவன். நிறைவு நாளில் (மார்ச் 27), சக்கைபோடு போடும் "தகவல் தொழில்நுட்பத் துறை"யின் தற்போதைய போக்கு பற்றி அலசுகிறார் ஹேமா கோபால். "வங்கிகளில் கல்வி கடன்" பெறும் வழிமுறைகளை கூறுகிறார் வங்கியாளர் வணங்காமுடி.

"வேலைவாய்ப்புக்கு தயாராவது எப்படி" என்று விவரிக்கிறார் சுஜித்குமார். 60 முதல் 80 சதவீதம் வரை மதிப்பெண் பெறுவோருக்கான "மேல்படிப்பு வாய்ப்புகள்" பற்றி சொல்கிறார் ரமேஷ் பிரபா. "நானோடெக், ஏரோஸ்பேஸ்/ஏரோநாட்டிக்கல், ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ்" பற்றி விவரிக்கிறார் அரவிந்தன்.

இந்நிகழ்ச்சியை, ராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி, கற்பகம் கல்வி நிறுவனங்கள், நேரு குழும கல்வி நிறுவனங்கள், சி.ஆர்., பொறியியல் கல்லூரி, எஸ்.என்.ஆர்., சன்ஸ் டிரஸ்ட், அமிர்தம் பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர் ஆகியன இணைந்து வழங்குகின்றன.

அனுமதி இலவசம். பெற்றோர்களே, பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள, உங்களது பிள்ளைகளை அழைத்து வந்து, எதிர்காலத்தை வளமாக்கும் உயர் படிப்பையும், கல்வி நிறுவனத்தையும் தேர்வு செய்யுங்கள். தினமலர் உங்களை அன்புடன் அழைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us