உப்பட்டியில் விரைவில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம்
உப்பட்டியில் விரைவில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம்
UPDATED : மார் 24, 2013 12:00 AM
ADDED : மார் 24, 2013 11:04 AM
அ நிறம் | அளவு
ஊட்டி: பந்தலூர் உப்பட்டியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் விரைவில் துவங்கப்படவுள்ளது.
குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக, கூடலூர் கோட்டம், பந்தலூர் தாலுகா நெல்லியாளம் பேரூராட்சி உப்பட்டியில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில், 4.90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி நிலையத்தில், 14 - 40 வயதுக்குட்பட்ட, ஆண், பெண் இருபாலரும் இணைந்து தொழிற்பயிற்சி பெற்று பயனடையலாம். இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
