தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகு என்பது அறிவை குறிக்கும்: அன்னை தெரசா பல்கலை துணைவேந்தர்

அழகு என்பது அறிவை குறிக்கும்: அன்னை தெரசா பல்கலை துணைவேந்தர்

அழகு என்பது அறிவை குறிக்கும்: அன்னை தெரசா பல்கலை துணைவேந்தர்


UPDATED : மார் 25, 2013 12:00 AM

ADDED : மார் 25, 2013 10:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2013 12:00 AM ADDED : மார் 25, 2013 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சரளா, பேராசிரியைகள் ராஜேஸ்வரி, கீதா முன்னிலை வகித்தனர்.

முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வென்ற மாணவி பிரவீணாரோஸ் உட்பட 112 மாணவிகளுக்கு, பி.எட்., பட்டங்களை துணைவேந்தர் மணிமேகலை வழங்கினார். அவர் பேசியதாவது:

பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும். நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். ஆளுமைத் திறனை வளர்த்துக் கொண்டால்தான், போட்டி நிறைந்த உலகில் தாக்குப்பிடிக்க முடியும். பெண்கள் தங்களின் வெளிஅழகை பராமரிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அழகாக இருக்கவேண்டும் என எண்ணுகின்றனர்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் அழகு என்பது அறிவையே குறிக்கும். தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்துகொண்டே இருக்கும் இன்றைய சூழலில், ஆசிரியர்களும் அதற்கேற்ப தங்களின் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.

மாணவர்களின் கேள்விகளை சமாளிக்க, விரல் நுனியில் அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே, ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மத்தியில் மரியாதை இருக்கும். இல்லாவிட்டால் கேலிப்பொருளாகக் கூடிய அபாயம் உள்ளது, என, அன்னை தெரசா பல்கலை துணைவேந்தர் மணிமேகலை பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us