தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமஸ்கிருத பாடத்தில் பதக்கம் வென்ற முஸ்லிம் மாணவர்கள்

சமஸ்கிருத பாடத்தில் பதக்கம் வென்ற முஸ்லிம் மாணவர்கள்

சமஸ்கிருத பாடத்தில் பதக்கம் வென்ற முஸ்லிம் மாணவர்கள்


UPDATED : மார் 27, 2013 12:00 AM

ADDED : மார் 27, 2013 08:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2013 12:00 AM ADDED : மார் 27, 2013 08:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆமதாபாத்: குஜராத் பல்கலைக்கழகம் நடத்திய தேர்வுகளில், சமஸ்கிருத பாடத்தில், இரண்டு முஸ்லிம் மாணவர்கள், தங்க பதக்கம் வென்றுள்ளனர்.

குஜராத் பல்கலைக்கழகத்தின், 61வது பட்டமளிப்பு விழா, ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. அதில், பல்வேறு பாடப் பிரிவுகளில், சாதனை படைத்த, மாணவ, மாணவியருக்கு பதக்கமும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது.

மொத்தம், 118 மாணவ, மாணவியர், 211 பிரிவுகளில் பதக்கம் வென்றனர். இவர்களில், சமஸ்கிருத மொழி பாடத்தில், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து, ஷேக் தைபு கான் என்ற, முஸ்லிம்மாணவரும், யாஸ்மின் பானு என்ற மாணவியும், தங்கப் பதக்கம் பெற்றனர்.

அரசு கல்லூரி ஒன்றில், பி.ஏ., படித்து, பட்டம் பெற்றுள்ள, ஷேக் தைபு கான், சமஸ்கிருத மொழி பாடப்பிரிவில், 2 தங்கப் பதக்கங்களையும், ஐந்து கல்வி உதவித்தொகை விருதையும் பெற்றுள்ளார்.

சாதாரண பழ வியாபாரியின் மகளான, யாஸ்மின் பானு, பட்டப்படிப்பில், சமஸ்கிருதத்தை முதன்மை பாடமாக எடுத்து, தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us