தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"தினமலர்" வழிகாட்டி இன்று கடைசி நாள்

"தினமலர்" வழிகாட்டி இன்று கடைசி நாள்

"தினமலர்" வழிகாட்டி இன்று கடைசி நாள்


UPDATED : மார் 27, 2013 12:00 AM

ADDED : மார் 27, 2013 08:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2013 12:00 AM ADDED : மார் 27, 2013 08:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

"தினமலர்" மற்றும் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை சார்பில், தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்த, இரண்டு நாள் வழிகாட்டி கருத்தரங்கில், ஏராளமான மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து, உயர் கல்வியை தேர்வு செய்வது தொடர்பான பயனுள்ள விஷயங்களை தெரிந்து கொண்டனர்.

மேலும், எந்த கல்வி நிறுவனங்களில் என்ன வகையான படிப்புகள் உள்ளன, கட்டணம் மற்றும் இதர வசதிகள் விவரங்களையும் கண்காட்சியில் உள்ள ஸ்டால்கள் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் தெரிந்துகொண்டனர்.

இன்று நிறைவு நாள் நிகழ்ச்சியில், சக்கைபோடு போடும் "தகவல் தொழில்நுட்பத் துறை"யின் தற்போதைய போக்கு பற்றி அலசுகிறார் ஹேமா கோபால்.

மேல்படிப்புக்கு காசு வேண்டாமா? "வங்கிகளில் கல்வி கடன்" பெறும் வழிமுறைகளை கூறுகிறார் வணங்காமுடி.

"வேலை வாய்ப்புக்கு தயாராவது எப்படி?" என்று விவரிக்கிறார் சுஜித்குமார்.

60 முதல் 80 சதவீதம் வரை மதிப்பெண் பெறுவோருக்கான "மேல்படிப்பு வாய்ப்புகள்" பற்றி சொல்கிறார் ரமேஷ் பிரபா.

தற்போது திடீர் முக்கியத்துவம் பெற்றுள்ள "நானோடெக், ஏரோஸ்பேஸ்/ஏரோ நாட்டிக்கல், ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ்" பற்றி விவரிக்கிறார் அரவிந்தன்.

இந்நிகழ்ச்சியை, ராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி, கற்பகம் கல்வி நிறுவனங்கள், நேரு குழும கல்வி நிறுவனங்கள், சி.ஆர்., பொறியியல் கல்லூரி, எஸ்.என்.ஆர்., சன்ஸ் டிரஸ்ட், அமிர்தம் பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர் ஆகியன இணைந்து வழங்குகின்றன.

கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கும். அனுமதி இலவசம். கல்வி நிறுவனங்கள், படிப்புக்கள் விவரங்கள் அடங்கிய, "தினமலர்" வழிகாட்டி புத்தகங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

மாணவர்களே, பெற்றோர்களே உங்களின் சிறந்த எதிர்காலத்திற்காக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று கண்காட்சி நேரம்: பல்வேறு கல்லூரிகளின் ஏராளமான ஸ்டால்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் அனைத்து பாடப்பிரிவுகள் பற்றி அறிந்து கொள்ள அரிய வாய்ப்பு இது. ஸ்டால்களின் கண்காட்சி இன்று காலை 10.30 மணிக்கு துவங்கி, மாலை 6.30 மணிக்கு நிறைவு பெறுகிறது. கருத்தரங்கு காலை 10 மணிக்கு துவங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us