புதுச்சேரியில் "தினமலர்" வழிகாட்டி நிகழ்ச்சி இன்று நிறைவு
புதுச்சேரியில் "தினமலர்" வழிகாட்டி நிகழ்ச்சி இன்று நிறைவு
UPDATED : ஏப் 01, 2013 12:00 AM
ADDED : ஏப் 01, 2013 09:20 AM
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்வி படிப்புகளைக் குழப்பமின்றி தேர்வு செய்வதற்காக, "தினமலர்" நாளிதழ், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழக கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சி, புதுச்சேரி முத்தியால்பேட்டை சுபலட்சுமி மகாலில் கடந்த, 30ம் தேதி துவங்கியது.
துவக்க நாளில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர் கல்வி நிறுவனங்களின் ஸ்டால்களை பார்வையிட்டு, விளக்கக் குறிப்பேடு மற்றும் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றதுடன், கருத்தரங்கிலும் பங்கேற்றனர்.
வழிகாட்டியின், இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விடுமுறை என்பதால், காலை, 8.00 மணிக்கே, ஏராளமான மாணவர்கள், பெற்றோர்களுடன் குவிந்தனர். காலையில் நடந்த கருத்தரங்கில், வேலைவாய்ப்பினை உருவாக்கித் தரும் கருத்தரங்குகளில் பங்கேற்று, சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.
வழிகாட்டி கண்காட்சி, இன்று (ஏப். 1ம் தேதி) நிறைவு பெறுகிறது. வழிகாட்டி கண்காட்சியில், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த, முன்னணி கல்வி நிறுவனங்களின், 50க்கும் மேற்பட்ட, ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
