தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு


UPDATED : ஏப் 02, 2013 12:00 AM

ADDED : ஏப் 02, 2013 08:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 02, 2013 12:00 AM ADDED : ஏப் 02, 2013 08:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமிய பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்து விட்டதால், துணைவேந்தருக்கான பணியை சிண்டிகேட் மேற்கொள்ள உத்தரவிடக் கோரி தாக்கலான வழக்கில், மனுதாரர் சிண்டிகேட்டை அணுக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

காந்திகிராமம் கிராமிய பல்கலை ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் சங்க செயலாளர் ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: துணைவேந்தர் காலிப்பணியிடம் ஏற்படும்போது, பல்கலை விதிப்படி, துணைவேந்தருக்கான பணியை சிண்டிகேட் மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, இந்நடைமுறை தொடரலாம். தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் மார்ச் 31 ல் முடிந்துவிட்டது. இவருக்கு, மேலும் 6 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்து, மத்திய மனிதவளமேம்பாட்டுதுறை செயலாளர் 2012 ஏப்.,2 ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மேலும், 6 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்து நவ.,6 ல் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் உத்தரவிட்டார். முதன்முதலில் பணி நீட்டிப்பு வழங்கும் போதே துணைவேந்தர், டீன் மற்றும் துறைத் தலைவர்கள் தேர்வு செய்தல், பட்டமளிப்பு உட்பட சில விதிகளில் திருத்தம் கொண்டுவர, மத்திய அரசுக்கு பல்கலை நிர்வாகம் பரிந்துரைத்தது. இதற்கு, மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.

விதிமுறைகள் திருத்தம் பரிசீலனையில் உள்ளது; இதில் எவ்வித முடிவும் மேற்கொள்ளவில்லை என, தகவல் உரிமைச் சட்டத்தில் விபரங்கள் கோரிய போது தெரியவந்தது. பல்கலை விதிப்படி, துணைவேந்தருக்கான பணியை சிண்டிகேட் மேற்கொள்ள, பதிவாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா கொண்ட பெஞ்ச் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார். மனுதாரர், பல்கலை சிண்டிகேட்டை அணுகலாம், என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவை பைசல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us