தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மைதானம் நடுவில் டிரான்ஸ்பார்மர்: கலக்கத்தில் பள்ளி மாணவர்கள்

மைதானம் நடுவில் டிரான்ஸ்பார்மர்: கலக்கத்தில் பள்ளி மாணவர்கள்

மைதானம் நடுவில் டிரான்ஸ்பார்மர்: கலக்கத்தில் பள்ளி மாணவர்கள்


UPDATED : ஏப் 02, 2013 12:00 AM

ADDED : ஏப் 02, 2013 02:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 02, 2013 12:00 AM ADDED : ஏப் 02, 2013 02:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே, தொருவளூர் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தின் நடுவில் உள்ள, "டிரான்ஸ்பார்மர்" அகற்றப்படாததால், மாணவர்களின் விளையாட்டு திறன் வீணாகி வருகிறது.

மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிப்பதற்காக, "பைக்கா" போன்ற பல விளையாட்டு போட்டிகளை ஒன்றிய, மாவட்ட அளவில் நடத்தி வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களை ஊக்கப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், மைதானமே இல்லாமல் விளையாட்டை எப்படி ஊக்கப்படுத்துவது என்ற கேள்வி, தொருவளூர் அரசு உயர்நிலை பள்ளியில் எழுந்துள்ளது. இங்கு 160 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சரித்திரம் உள்ளது.

ஆனால் விளையாட்டில் மட்டும் சாதனை புரிய முடியாமல் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள், மற்ற பள்ளி மாணவர்கள் விளையாட்டில் சாதனை புரிவதை ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர்.
பள்ளி அருகே உள்ள ஊராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு இடம், விளையாட்டு மைதானத்திற்காக வழங்க, பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தனர்.

அதை நம்பி அந்த இடத்தில் கூடைப்பந்து கம்பங்களும் நட்டனர். ஆனால் நடுவே "டிரான்ஸ்பார்மர்" உள்ளதால், மாணவர்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை. தற்போது மைதானத்தில் முள்செடிகள் வளர்ந்துள்ளன.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் மகாலட்சுமி கூறியதாவது: பள்ளி மைதானத்தில் உள்ள மின்தடை மாற்றியை அகற்றக்கோரி மின்வாரியத்திற்கு மனு கொடுத்துள்ளோம். விரைவில் அகற்றுவதாக கூறினர். மின்தடை மற்றி அப்புறப்படுத்திய பின் விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us