இரட்டை அர்த்தத்தில் பாடம்: ஆசிரியரை எதிர்த்து போராட்டம்
இரட்டை அர்த்தத்தில் பாடம்: ஆசிரியரை எதிர்த்து போராட்டம்
UPDATED : நவ 08, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
பூதப்பாண்டி: அரசு பள்ளியில், இரட்டை அர்த்தத்தில் பாடம் கற்பித்த ஆசிரியருக்கு எதிராக, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி, நாகர்கோவில் அருகே திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகன். இவர், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேதியியல் பாடம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக, இரட்டை அர்த்தத்துடன் பாடம் நடத்தினார் என்று தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் புகார் கூறினர்.
தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்காததால், மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து, நவ., 7ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியரும், பிற ஆசிரியர்களும் சமரச பேச்சில் ஈடுபட்டதை தொடர்ந்து, மாணவர்கள் வகுப்புக்குத் திரும்பினர்.
