தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"தினமலர்" செய்தி எதிரொலி: பாழடைந்த பள்ளி கட்டடங்கள் இடிப்பு

"தினமலர்" செய்தி எதிரொலி: பாழடைந்த பள்ளி கட்டடங்கள் இடிப்பு

"தினமலர்" செய்தி எதிரொலி: பாழடைந்த பள்ளி கட்டடங்கள் இடிப்பு


UPDATED : ஏப் 04, 2013 12:00 AM

ADDED : ஏப் 04, 2013 07:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 04, 2013 12:00 AM ADDED : ஏப் 04, 2013 07:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்: தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, பெருங்களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பாழடைந்து காணப்பட்ட கட்டடங்கள் நேற்று இடிக்கப்பட்டன.

பழைய பெருங்களத்தூரில், பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி, 1961ல் துவக்கப்பட்டது. 230 மாணவர்கள் படிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக, துவக்கத்தில் கட்டப்பட்ட, இரண்டு ஓட்டு கட்டடங்கள், ஒரு கான்கிரீட் கட்டடம் என, மூன்று கட்டடங்கள் பாழடைந்து காணப்பட்டன. ஓடுகளும், கட்டைகளும் உடைந்து, விரிசல் ஏற்பட்டு, எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தன.

இது தெரியாமல், மாணவர்கள் பாழடைந்த கட்டடங்களில் அமர்ந்து விளையாடியதோடு, உணவும் அருந்தி வந்தனர். இதுகுறித்து, தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதை அடுத்து, பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலர், பரங்கிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்கள் அந்த கட்டடங்களை ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து, இரண்டு ஓட்டு கட்டடங்கள் நேற்று இடிக்கப்பட்டன. ஒரு வாரத்தில், மூன்றாவது கட்டடமும் இடிக்கப்பட உள்ளது. பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "இரண்டு கட்டடங்கள் இடிக்கப்பட்டு விட்டன. கலெக்டரிடம் அனுமதி பெற்று, மூன்றாவது கட்டடத்தை ஒரு வாரத்தில் இடிப்போம். அங்கு புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

கல்வி குழு தலைவர் புகழேந்தி கூறுகையில், "பள்ளி கட்டடத்தின் நிலைமையை சுட்டிக்காட்டிய, தினமலர் நாளிதழுக்கு, பெற்றோர் மற்றும் கல்வி குழுவின் சார்பில், நன்றியை தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us