UPDATED : ஏப் 04, 2013 12:00 AM
ADDED : ஏப் 04, 2013 03:25 PM
தீவட்டிப்பட்டி, சேலம்: தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி, காட்டு வளவை சேர்ந்த கூலி தொழிலாளி குப்புசாமி. இவரது மகள் வெண்ணிலா,17. இவர், பெரிய வடகம்பட்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவை எதிர்நோக்கி இருந்தார்.
இந்நிலையில், தேர்வு முடிந்த நாளில் இருந்தே, தோல்வி பயத்தால், சோகத்தோடு காணப்பட்டார். அதோடு, பெற்றோர் உள்பட யாரிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்துள்ளார். கடந்த, 2ம் தேதி, வீட்டில், தனியாக இருந்த மாணவி வெண்ணிலா, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தீவட்டிப்பட்டி போலீஸார், மாணவியின் உடலை கைப்பற்றினர்.
தோல்வி நிரந்தரமல்ல என்பதை மாணவர்களும், பெற்றோரும் உணரவேண்டும். கவலையை தெரிவிப்பதை விட, தன்னம்பிக்கையை வளர்ப்பதே அவசியம் என்பதை உற்றாரும், உறவினர்களும், சுற்றத்தாரும் உணரவேண்டும். மேலும் http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=20&cat=4
