தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்

மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்

மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்


UPDATED : ஏப் 05, 2013 12:00 AM

ADDED : ஏப் 05, 2013 08:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2013 12:00 AM ADDED : ஏப் 05, 2013 08:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்டசபையில் நேற்று நடந்த உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, பார்த்திபன் (தே.மு.தி.க.,) கோ.வி.செழியன் (தி.மு.க.,) ஆகியோர், "கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், போராட்டங்கள் நடக்கின்றன" என, குறிப்பிட்டனர்.

இதற்கு, பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க, தைவான் நாட்டில் உள்ள நிறுவனத்திடம், ஒப்பந்தம் செய்யப்பட்டது. தைவான் நாட்டில் பெய்த கடும் மழையால், கணினி நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மடிக்கணினிகள் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.

தமிழக அரசைப் பொறுத்தவரை, ஒரே நேரத்தில், அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினியை வழங்க விரும்புகிறது. இதற்கு, தேவைப்படும் மடிக்கணினிகளை வினியோகம் செய்யும் அளவுக்கு, கணினி உற்பத்தி நிறுவனங்களுக்கு சக்தியில்லை. இதனால், படிப்படியாக ஆர்டர்கள் கொடுத்து, மடிக்கணினிகளைப் பெற்று, மாணவர்களுக்கு வழங்குகிறோம்.

இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us