அமெரிக்காவில் எம்.எஸ்., படிக்க என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்காவில் எம்.எஸ்., படிக்க என்ன செய்ய வேண்டும்?
UPDATED : ஏப் 07, 2013 12:00 AM
ADDED : ஏப் 07, 2013 08:48 AM
- சுரேஷ், சென்னை
பெரும்பாலான அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு, GRE (Graduate Record Examination), ஆங்கிலத் திறனைக் குறிக்கும் TOFEL (Test of English as Foreign Languageஅல்லது IELTS (International English Language Testing System) போன்ற தகுதித்
தேர்வுகளில், குறிப்பிட்ட மதிப்பெண்களைப் பெற்றிருத்தல் அவசியம்.
எம்.எஸ்., (ஐ.டி.,) படிப்பை வழங்கும் பல்கலைக்கழகங்கள் பற்றி www.petersons.com என்ற இணையதளத்தில் அறியலாம். படிக்க விரும்பும் பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்தல் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் பற்றி அறிய, காண்க: www.educationusa. state.gov
இதுதொடர்பாக, மேலும் ஆலோசனைகளைப் பெற, 044-28574423/4134 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாக EducationUSA திட்ட அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது usiefchennai@usief.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.
மேலும் காண்க, இணையத்தில்: www.usief. org.in முகநூலில்: www.Facebook.com/ EducationUSAChennai
கேள்வி: அமெரிக்கா, 104 அணு மின் நிலையங்கள் மூலம் 97,860 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இது அமெரிக்காவின் மொத்த மின்சார உற்பத்தியில், 20 சதவிகிதம். மேலும், இந்தியாவில் அணு மின் நிலையங்களை அமைத்துத் தருவது தொடர்பாக, அமெரிக்கா ஒப்பந்தமும் செய்திருக்கிறது. இந்தப் பின்னணியில், ரஷ்ய உதவியுடன்
நிறுவப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் உற்பத்தியைத் தொடங்க இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவு மக்கள் போராடி வருகின்றனர். அமெரிக்காவிலிருந்து அவர்களுக்கு நிதி வருகிறது என்று சொல்லப்படுவதில் நிறைய உண்மை இருக்கிறது. அமெரிக்கா அணு மின் நிலையத்தை இயக்கினால் ஆபத்தில்லை, அதையே வேறு நாடுகள் செய்தால் ஆபத்து என்று கூறுவது நியாயமா? இந்தியா அணு மின் நிலையங்களை அமைப்பது தொடர்பான அமெரிக்காவின் உண்மையான நிலைப்பாடு என்ன? - ராமையா, மதுரை
பதில்: மக்கள் தேவைக்கான (சிவில்) அணுசக்தித் திட்டங்களில், இந்தியா முதலீடு செய்வதை அமெரிக்கா தீவிரமாக ஆதரிக்கிறது. இத்தகைய அணுசக்தி ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது, இந்தியாவின் வருங்கால எரிசக்திப் பாதுகாப்புக்கும், இருநாடுகளின் நீண்ட கால வளமைக்கும் முக்கியானது.
மக்களின் தேவையின் பொருட்டு, பொறுப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் அணுசக்தியைப் பயன்படுத்துவதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. உலக அணுசக்தி முகமையின் (IAEA) தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டங்களுக்கும் அணு தொழில்நுட்பங்களை அமைதி வழிகளுக்குப் பயன்படுத்துவதற்கும் அதிக அளவில் நிதியாதரவு அளிக்கும் நாடாக அமெரிக்கா இருந்து வந்திருக்கிறது. தொடர்ந்தும் அவ்வாறு இருக்கும்.
கேள்வி: அமெரிக்காவில் கல்வி பயில்வது அயல் நாட்டவர்களுக்குத்தான் அதிகச் செலவு மிக்கதா அல்லது அமெரிக்கர்களுக்குமா? - தேவா, திருநெல்வேலி
பதில்: அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில், கல்விக் கட்டணமும் இதரக் கட்டணமும், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடக்கூடியது. அமெரிக்காவில் பொது மற்றும் தனியார் பல்கலைக் கழகங்கள் உள்ளன. தனியார் பல்கலைக்கழகங்களை விட பொதுப் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணம் குறைவாக இருக்கக்கூடும்.
ஏனெனில், பொதுப் பல்கலைக்கழகங்கள் மாநில அல்லது பெடரல் அரசுகளிடமிருந்து நிதி ஆதரவு பெறலாம். பட்டப் படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பு போன்று படிப்புக் காலத்தின் அளவை ஒட்டியும் கட்டணம் வேறுபடலாம். அதே மாநிலத்தைச் சேர்ந்தவரென்றால் ஒரு கட்டணம், வெளிமாநிலத்திலிருந்து வந்து சேர்ந்தவரென்றால் ஒரு கட்டணம் என, இரு கட்டணப் பிரிவுகளை பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ளன.
எல்லா மாணவர்களுக்கும், அதாவது அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் ஆகிய அனைவருக்கும், அவர்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் குடியிருப்புவாசிகளாக இல்லாவிடில், இந்த கட்டண அடிப்படை பொருந்தும். கூடுதல் தகவல்களை அறிய, காண்க: www.educationusa. state.gov
இதுதொடர்பாக, மேலும் ஆலோசனைகளைப் பெற 044-28574423/4134 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாக EducationUSA திட்ட அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது usiefchennai@usief.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். மேலும் காண்க, இணையத்தில்: www.usief. org.in முகநூலில்: www.Facebook.com/ EducationUSAChennai
கேள்வி: அந்த காலத்திலெல்லாம் இயற்கையை கடவுளாக வழிபடும் மரபு மக்களிடம் இருந்தது. அதன் மூலம் வளம் பெற்றுப் பயனடைந்தனர். கால மாற்றத்தில், இந்த மரபு மறைந்து போக, வறட்சி, வெள்ளம், இயற்கைச் சீற்றங்கள் உட்பட பல விதங்களில் இப்போது அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். உலகெங்கிலும் உள்ள மக்களாகிய நாம், தினமும் காலை 10 நிமிடம், இயற்கையை வழிபட வேண்டும். இது உலகைப் பேரழிவிலிருந்து மீட்கும். இயற்கைக் கடவுளின் சக்தி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலக நாடுகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அறிவியல் நிபுணர்கள், விவசாயிகள் ஆகிய சகல தரப்பினரும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து கூட்டறிக்கை வெளியிட வேண்டும். இந்த விஷயத்தில், அமெரிக்கா முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று நான் கோருகிறேன். நாம் புதிய அமெரிக்காவையும் புதிய உலகையும் பார்க்கலாம்? - காளிவேல், திண்டுக்கல்
பதில்: நாம் வாழும் உலகின் மிகப் பெரும் அச்சுறுத்தல்களில் ஒன்று பருவநிலை மாற்றம். இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் கீழ், முன் எப்போதும் இல்லாத வகையில், பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்க அமெரிக்கா பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
பருவநிலை மாற்றங்களின் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதுடன் சூழலுக்கு கேடு விளைவிக்காத எரிதிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் உள்நாட்டுக் கொள்கைகளை ஆதரிப்பது மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டுப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாகப் பங்கேற்பது ஆகியவை அந்த நடவடிக்கைகளில் அடங்கும். ஆனால், அமெரிக்காவின் நடவடிக்கைகள் மட்டும் போதுமானவை அல்ல.
பருவநிலை மாற்றம் என்பது உலகின் சவால். அதற்கு உலகளாவிய முறையில்தான் தீர்வு காண முடியும். முக்கியமான இருதரப்பு மற்றும் பன்னாட்டு உறவுகளில், பருவநிலை மாற்றம், மாசற்ற எரிதிப் பயன்பாடு ஆகிய பிரச்னைகளை அமெரிக்கா முதன்மைப்படுத்தியிருக்கிறது.
பருவநிலை மாற்றத்தினால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ள அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும். சூழலுக்கு கேடு விளைவிக்காத, மாசற்ற எரிசக்தி நிறைந்த வருங்காலம் நோக்கி உலகைச் செலுத்தும் வகையில், சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் பன்னாட்டு ஒப்பந்தத்தை எட்டவும் அமெரிக்கா தீவிரமாகப் பாடுபடும். தினமும் மற்றும் வார வேலை நேரம் உட்பட, பல கறாரான தொழிலாளர் நல விதிகளை அமெரிக்கா முன் கடைப்பிடித்து வந்தது.
கேள்வி: இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் நுழைந்து வரும் இன்றைய நிலையில், அத்தகைய விதிகளின் நிலை என்ன? - ரூத், சென்னை
பதில்: தொழிலாளர் உரிமைகளைக் கட்டிக்காப்பதிலும், வேலை தேடுவோர், வேலை செய்வோர், வேலை செய்து ஓய்வு பெற்றோர் ஆகியோரது நலன்களைப் பாதுகாப்பதிலும், அமெரிக்காவுக்கு ஒரு வலுவான வரலாறு உண்டு. இத்தகைய, அரசின் தொழிலாளர் பாதுகாப்பு நடவடிக்கைகள், உத்திரவாதமான குறைந்தபட்ச ஊதியம், குழந்தைத் தொழிலாளருக்கு தடை, கூடுதல் நேர உழைப்புக்கு உரிய ஊதியம், வேலையில்லா காலத்துக்கு உரிய பலன்கள், பணியிடப் பாகுபாட்டால் பாதிப்புக்குள்ளாகாமல் காத்தல் உள்ளிட்ட பெடரல், மாநில மற்றும் வட்டார அளவிலான பல்வேறு விதிமுறைகள் அடங்கியவை.
அயல் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து வேலை பார்ப்பவர்களுக்கும் இத்தகைய விதிமுறைகளில் பல பொருந்தும். உதாரணமாக, எச்-1பி விசாவில் அமெரிக்காவில், வேலை செய்பவர்களுக்கு, தொழிலாளர் கட்டுப்பாட்டு நடைமுறையின் (இஅ) கீழ் குறிப்பிட்டுள்ளபடி, குறைந்த பட்ச ஊதியத்தை அளிப்பது அமெரிக்க பெடரல் சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில், அமெரிக்கத் தொழிலாளர் துறை, இத்தகைய விதிமுறைகள், சட்டங்கள் பின் பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து வருகிறது. மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் கூடுதல் விதிமுறைகளோடு இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து மேலும் அறிய, காண்க: www.dol.gov
கேளுங்கள் அமெரிக்காவை...: "தினமலர்" வாசகர்களின் அமெரிக்கா குறித்த அனைத்து விதமான சந்தேகங்களுக்கும், அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னையில் பதில் அளிக்கிறது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று வெளியாகும் இந்த பிரத்யேக பகுதிக்கு உங்களது கேள்விகள் மற்றும் கருத்துகளை உடனே அனுப்புங்கள்.
தினமலர், "கேளுங்கள் அமெரிக்காவை..." 39, ஒயிட்ஸ் ரோடு, சென்னை - 600 014. இ-மெயில்: askamerica@dinamalar.in
