தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., நுழைவுத்தேர்வு: 52 ஆயிரம் பேர் பங்கேற்பு

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., நுழைவுத்தேர்வு: 52 ஆயிரம் பேர் பங்கேற்பு

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., நுழைவுத்தேர்வு: 52 ஆயிரம் பேர் பங்கேற்பு


UPDATED : ஏப் 07, 2013 12:00 AM

ADDED : ஏப் 07, 2013 09:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 07, 2013 12:00 AM ADDED : ஏப் 07, 2013 09:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள முதுகலை பட்டப் படிப்புகளை நிரப்புவதற்காக, அண்ணா பல்கலை, நேற்று, நுழைவுத் தேர்வை நடத்தியது. எம்.பி.ஏ.,வுக்கான நுழைவுத் தேர்வு, காலையிலும், எம்.சி.ஏ.,வுக்கான நுழைவுத் தேர்வு, பிற்பகலிலும் நடந்தன.

எம்.பி.ஏ.,வுக்கான தேர்வை, 37 ஆயிரத்து, 768 பேரும், எம்.சி.ஏ.,வுக்கான நுழைவுத் தேர்வை, 14 ஆயிரத்து, 487 பேரும் எழுதினர். 100 மதிப்பெண்களுக்கு, "அப்ஜெக்டிவ்" முறையில், தேர்வுகள் நடத்தப்பட்டன. எம்.இ.,-எம்.டெக்., படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு, இன்று நடக்கிறது. இந்த தேர்வை, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.

இந்த தேர்வின் முடிவுகள், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, எம்.பி.ஏ., - எம்.இ., நுழைவுத் தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, சற்று குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு, எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வை, 45 ஆயிரத்து, 20 பேர் எழுதினர். அதே போல், எம்.இ., நுழைவுத்தேர்வை, 55 ஆயிரத்து, 516 பேர் எழுதினர். எம்.சி.ஏ., நுழைவுத் தேர்வை எழுதுவோர் எண்ணிக்கை மட்டும், கடந்த ஆண்டும், 14 ஆயிரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us