UPDATED : ஏப் 08, 2013 12:00 AM
ADDED : ஏப் 08, 2013 03:46 PM
அ நிறம் | அளவு
கரூர்: "தனியார் வேலைவாய்ப்பு முகாம், நாளை கரூரில் நடக்கிறது" என கலெக்டர் ஜெயந்தி கூறினார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு குழு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை, 9 மணிக்கு கரூர் ஆண்கள் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் எம்.ஆர்.எப்., டயர்ஸ், டி.வி.எஸ்., போன்ற 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில், எட்டாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களது கல்விச்சான்றுகளுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
கலந்துகொள்பவர்கள் விண்ணப்பம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பங்கேற்க வேண்டும்.
