தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குமரி வாலிபருக்கு மிஸ்டர் இந்தியா பட்டம்

குமரி வாலிபருக்கு மிஸ்டர் இந்தியா பட்டம்

குமரி வாலிபருக்கு மிஸ்டர் இந்தியா பட்டம்


UPDATED : ஏப் 09, 2013 12:00 AM

ADDED : ஏப் 09, 2013 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2013 12:00 AM ADDED : ஏப் 09, 2013 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுக்கடை: கன்னியாகுமரி மாவட்டம் கூட்டாலுமூடை சேர்ந்த வாலிபர் மிஸ்டர் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கூட்டாலுமூடு அருகே ஆவருவிளையைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் முரளிகுமார்(27). இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார். மேலும், ஜிம் பயிற்சி நிறுவனங்களில் சென்று பயிற்சி செய்து உடலை மெருகூட்டினார். இவர் கல்லூரியில் படிக்கும் போது மிஸ்டர் கோட்டயமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, மிஸ்டர் கேரளமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது உடலமைப்பை பார்த்து, மும்பை கப்பல்படையில் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் வேலை வழங்கப்பட்டது. முரளிகுமார் அலுவல்களுடன், உடற்பயிற்சியையும் தொடர்ந்து செய்து வந்தார்.

இந்த ஆண்டு மும்பை நவஸ்ரீக்கான போட்டி மும்பையில் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் முரளிகுமார் மும்பை நவஸ்ரீயாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2013ம் ஆண்டிற்கான மிஸ்டர் இந்தியா போட்டி கொச்சியில் நடந்தது. இதில், முதல் கட்டத்தில் 600 பேரும், இரண்டாம் கட்டத்தில் 200 பேரும், மூன்றாம் கட்டத்தில் 50 பேரும், நான்காம் கட்டத்தில் 10 பேரும், ஐந்தாம் கட்டத்தில் இரண்டு பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து, அதிக புள்ளிகள் பெற்று முரளிகுமார் மிஸ்டர் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டியில் தரைப்படை, விமானப்படை, கப்பல்படை, ரயில்வேத்துறை, மத்திய போலீஸ் படை வீரர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்குறித்து முரளிகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: "என் வெற்றிக்கு பின் என் பெற்றோர்கள் உள்ளனர். அம்மனின் ஆசியால் சாதனை வெற்றி பெற்றுள்ளேன். நான் தினமும் 35 நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கரு, பதப்படுத்தப்பட்ட ஒன்றரை கிலோ கோழி இறைச்சி, 600 கிராம் சலாடு மற்றும் புரோட்டீன் பவுடரும் சாப்பிடுவேன். சாப்பாட்டிற்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இவ்வாறு சாப்பிட்டு உடம்பை கட்டுக்கோப்புடன் வைத்துள்ளேன். கடற்படை அதிகாரிகளும் எனக்கு பல்வேறு விதத்தில் உதவி புரிகின்றனர். அதுவும் என் வெற்றிக்கு உறுதுணை ஆனது". இவ்வாறு முரளிக்குமார் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us