தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரையில் ‘ஜெயித்துக்காட்டுவோம்’ : திரண்ட மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

மதுரையில் ‘ஜெயித்துக்காட்டுவோம்’ : திரண்ட மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

மதுரையில் ‘ஜெயித்துக்காட்டுவோம்’ : திரண்ட மாநகராட்சி பள்ளி மாணவர்கள்


UPDATED : நவ 10, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை.,யுடன் இணைந்து பசுமலை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று அதிக மதிப்பெண்கள் பெற வல்லுனர்கள் வழங்கிய அறிவுரைகளை ஆர்வமாக கேட்டனர்.

நவ., 8ம் தேதி காலையில் எஸ்.எஸ்.எல்.சி., மாலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வெற்றிக்கான ‘டிப்ஸ்’களை ஆசிரியர்கள் வழங்கினர்.

எஸ்.எஸ்.எல்.சி.,:
மனநலம் (சமூக அறிவியல் கல்லூரி பேராசிரியர் கண்ணன்):
தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே நல்ல பள்ளி, கல்லூரிகளில் சேர முடியும். நமக்கு விருப்பமான குரூப்புகளை எடுக்க முடியும். அரசு அனைவருக்கும் வேலையளிப்பது கடினம். பன்னாட்டு நிறுவனங்கள் மாணவர்களின் பட்டங்களை மட்டும் பார்ப்பதில்லை. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2வில் மதிப்பெண்களையும் பார்க்கின்றனர். மாநகராட்சி பள்ளி மாணவர்களும் பொதுதேர்வில் அதிக மதிப்பெண்களுடன் மாநில ரேங்க் பெறுகின்றனர்.

கணக்கு (அவனியாபுரம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் எஸ்.கிறிஸ்டோபர் ஜெயசீலன்): இந்தாண்டு மாணவர்கள் வசதிக்காக தேர்வு நேரத்தை அரசு அதிகப்படுத்தி உள்ளது. கூட்டல், கழித்தல்களை தனியாக சீட் வாங்கி எழுதுவதை விட பேப்பரின் கீழ் பகுதியில் எழுதலாம். பார்முலாக்களை அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும். ஜியாமெட்ரி, கிராப் ஆகியவைகளை முதலில் எழுத வேண்டும்.

அறிவியல் (மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜி.மருதமுத்து): இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் குறிப்பிட்ட பாடங்களைதேர்வு செய்து முக்கிய கேள்விகளுக்கான விடைகளை எழுதி பார்க்க வேண்டும். தேவையான இடங்களில் படம் வரைந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு மதிப்பெண் பிரிவில் கேள்விகளையும் எழுதாமல் அதன் எண் மற்றும் பதில் மட்டுமே எழுத வேண்டும்.

ஆங்கிலம் (திருநகர் சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி): ஆங்கிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் தாள் என இரு தேர்வுகளையும் நன்றாக எழுதினால் தேர்ச்சி பெற முடியும். முதல் தாளை பொறுத்து கட்டுரை, பாட்டு போன்றவைகளை நன்றாக படிக்க வேண்டும். இரண்டாம் தாளில் கடிதம், பத்தி சுருக்குதல் போன்றவைகளை அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும். விடைகளை பிழையில்லாமல் எழுத வேண்டும்.

சமூக அறிவியல் (டி.வி.எஸ்.சுந்தரம் மேல்நிலை பள்ளி ஆசிரியை ஹேமா பிரபா): அதிக மதிப்பெண் கேள்விகளை பாயின்ட்டுகளாக எழுத வேண்டும். பாடங்களை தொடர்ந்து படித்தால் சிறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். மேலும் வரலாறு, புவியியல் ‘மேப்’ தவறாமல் எழுத வேண்டும்.

பிளஸ் 2:
ஆங்கிலம் (மதுரை கல்லூரி மேல்நிலை பள்ளி ஆசிரியர் குகன்):
ஆங்கில கட்டுரைகளை சொந்தமாக எழுதினால் அதிக மதிப்பெண் பெறலாம். மேலும் ஆங்கில இலக்கியம் மற்றும் கடிதம் எழுதுதல், பத்தி சுருக்குதல் குறித்து அடிக்கடி எழுதி பார்த்தால் நல்லது.

கணிதம் (டி நோபிலி மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஆர்.சந்திரசேகரன்): அணிகள் மற்றும் அணிக்கோவை, விக்டர், கலப்பெண்கள், பகுமுறைபடிவ கணிதம், வகை நுண்கணிதம்-2, தனிநிலை கணக்கியல் போன்ற பாடங்களை நன்றாக படித்தால் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு உண்டு. பார்முலாக்களை எழுத வேண்டும். பத்து, ஆறு, ஒரு மதிப்பெண் என கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

வேதியியல் (ஊமச்சிகுளம் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் வி.சரவணன்): முடிந்தளவுக்கு 7 முறை முழு பாட தேர்வை எழுதியிருந்தால் பொது தேர்வை நன்றாக எழுதலாம். அணு அமைப்பு, நடைமுறை வேதியியல் போன்ற எட்டுபாடங்களை படித்தால் போதும்.

இயற்பியல் (சரஸ்வதி நாராயணன் கல்லூரி பேராசிரியர் ஜி.குருபாலன்): இயற்பியலில் நிலை மின்னியல், மின்னோட்டவியல், மின்காந்த தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் போன்ற 7 பாடங்களை தேர்வு செய்து படித்தால் 90 சதவீத மதிப்பெண் பெறலாம். மின்மாற்றி, மின்தேக்கி தத்துவம் போன்ற அதிக மதிப்பெண் கேள்விகளை அடிக்கடி எழுதி பார்க்க வேண்டும்.

உயிரியல் (சி.இ.ஓ.ஏ.,மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியர் டி.கணேசன்): வரைபடங்களை நன்றாக வரைய வேண்டும். தாவரவியலில் ஆஞ்சியோஸ்பெர்ம்களின் வகைப்பாடு, தாவரசெயலியல், தாவர உள்ளமைப்பியல் பாடங்களை படிக்க வேண்டும். விலங்கியலில் முதல் பாடத்தை படித்தால் பாஸ்செய்யலாம்.

நிகழ்ச்சியை தங்கமயில் ஜூவல்லர்ஸ், நல்லி சில்க்ஸ், ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ், மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி இணைந்து வழங்கின. மாணவர்களுக்கு தினமலர் நாளிதழ் சார்பில் ‘ஜெயித்துக்காட்டுவோம்’ மாதிரி வினா மற்றும் ‘உடம்பும் மனசும் நல்லா இருக்கணும்’ புத்தகங்கள், பேடு, பேனா இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளிகளில் இருந்து மாணவர்களை இலவசமாக அழைத்து வர மாநகராட்சி அரசு பஸ்களை ஏற்பாடு செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us