தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடல்சார் பல்கலையில் மத்திய செயலர் திடீர் ஆய்வு

கடல்சார் பல்கலையில் மத்திய செயலர் திடீர் ஆய்வு

கடல்சார் பல்கலையில் மத்திய செயலர் திடீர் ஆய்வு


UPDATED : ஏப் 10, 2013 12:00 AM

ADDED : ஏப் 10, 2013 08:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2013 12:00 AM ADDED : ஏப் 10, 2013 08:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்ததையடுத்து, கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலர் சின்ஹா தலைமையிலான குழு, நேற்று ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வுக்குப் பின் சின்ஹா, கூறியதாவது: மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறை ஆணைய உத்தரவு இல்லாமல், இந்த பல்கலைக் கழக பணி நியமனத்தில், முறைகேடுகள், விதிமீறல்கள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. சில பாடப்பிரிவுகளில் துறைகளுக்கான ஒப்பந்த ஊழியர்களுக்கும், நிரந்தர ஊழியர்களுக்குமான ஊதிய விகிதர அளவு, மீறியது கண்டறியப்பட்டுள்ளது.

இங்குள்ள ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு பார்த்தால், இதை விதிமுறை மீறல் என்று கூறிவிட முடியாது. இங்கு சட்டம், நிர்வாகம், கப்பல் வடிவமைப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் பேராசிரியர்கள், நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாக படிப்பிற்கு, அதிகம் பேராசிரியர்களும், கப்பல் வடிவமைப்பு பிரிவிற்கு, குறைவான பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டவர்கள் பணியில் சேராததற்கு, பல்கலையை குறை கூற முடியாது. சமீபத்தில் 105 பேராசிரியர் பதவியிடங்களுக்கு, 30 பேர், தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 19 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர்.

மற்றவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. நிலைமை இப்படி இருக்கையில், பேராசிரியர்கள் இல்லாமல் பாடம் கற்பிப்பது என்பது சாத்தியமில்லை. இதை கருத்தில் கொண்டே, ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட பேராசிரியர்களை, பணி நியமனம் செய்வது என, முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன்.

இந்த பேராசிரியர் பணி நியமனங்களை பல்கலைக் கழகத்தினுடைய செயற்குழுவில் தாக்கல் செய்து, அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும். இந்த விதியை மனதில் கொண்டு, தற்போது பல்கலைக் கழக துணை வேந்தரிடம், செயற்குழுவை கூட்டுமாறு பரிந்துரை செய்துள்ளேன். அவரும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அந்த குழுவில் எடுக்கும் தீர்மான அடிப்படையில் இந்த பல்கலைக் கழக பேராரிரியர் பணி இடம், முறைப்படுத்தப்படும். முறைகேடுகள் சம்பந்தமாக இந்த குழுவின் அறிக்கை பல்கலைக் கழகத்திற்கு அளிக்கப்படும். அது செயற்குழுவில் தாக்கல் செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.

மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காத ஒரு சில படிப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன. எனவே, இதுபோன்ற பாடப்பிரிவுகளை நிறுத்தி தொழில் சம்பந்தமான, வேலை வாய்ப்பு அளிக்கும் பாடப்பிரிவுகளை துவக்கி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. உலகளவில் பொருளாதார தேக்கநிலை நீடிக்கும் பட்சத்தில், மாணவர்களுக்கு சர்வதேச நிறுவனங்களின் கப்பல்களில் வேலை கிடைப்பதில்லை.

இதற்கு காரணம், பல்கலையில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய செயல்முறை பயிற்சி கிடைக்காததுதான். இதற்காக இந்தியாவில் உள்ள பிரபல தனியார் கப்பல் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பல்கலை மாணவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கும் வகையில் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தலைமை அலுவலக கட்டடம் திறப்பு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும ஒப்புதல் பெறாத காரணத்தால் காலதாமதம் ஏற்படுகிறது. பல்கலை வளாக வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தவறானது. இவ்வாறு, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலர், சின்ஹா தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us