திண்டுக்கல் பள்ளியில் தீ விபத்து: மாணவிகள் அலறியடித்து ஓட்டம்
திண்டுக்கல் பள்ளியில் தீ விபத்து: மாணவிகள் அலறியடித்து ஓட்டம்
UPDATED : ஏப் 10, 2013 12:00 AM
ADDED : ஏப் 10, 2013 08:29 AM
திண்டுக்கல்: திண்டுக்கல், புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின், கம்ப்யூட்டர் அறையில் தீ பிடித்ததால், மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
திண்டுக்கல் கோர்ட் அருகே உள்ள, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று மதியம், 3:00 மணி அளவில், "ஏசி&'யில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு, அறையில் இருந்த கம்ப்யூட்டரில் தீ பிடித்தது. அந்த வகுப்பறையில் இருந்த 62 மாணவிகளும், கரும்புகை வருவதை பார்த்ததும், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கீழே விழுந்ததில் சிலர் காயமடைந்தனர்.
கம்ப்யூட்டர் அறை முழுவதும் பரவிய தீயை, தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இரண்டு கம்ப்யூட்டர்கள், முற்றிலும் எரிந்து சாம்பலாகின; 25 கம்ப்யூட்டர்கள் பழுதாகின. தீ விபத்திற்கு, மின் கசிவு தான் காரணம் என, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எஸ்.பி., ஜெயச்சந்திரன், சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
