தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிசியோதெரபி நிபுணர்களை டாக்டர்கள் என்பது தவறு: டாக்டர்கள் சங்கத் தலைவர்

பிசியோதெரபி நிபுணர்களை டாக்டர்கள் என்பது தவறு: டாக்டர்கள் சங்கத் தலைவர்

பிசியோதெரபி நிபுணர்களை டாக்டர்கள் என்பது தவறு: டாக்டர்கள் சங்கத் தலைவர்


UPDATED : ஏப் 10, 2013 12:00 AM

ADDED : ஏப் 10, 2013 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2013 12:00 AM ADDED : ஏப் 10, 2013 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: "பிசியோதெரபி நிபுணர்களை, டாக்டர்கள் என்று சொல்லக்கூடாது. பிசியோதெரபி மாணவர்கள் தேவையின்றி, தூண்டி விடப்படுகின்றனர்," என, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கடந்த 2009 ல், வெளியிட்ட அரசாணையில் (338), பிசியோதெரபி முடித்தவர்களை "பிசியோதெரபிஸ்ட்" என்றே, அரசு அறிவித்தது. சென்னை ஐகோர்ட்டும், 2011ல், "டாக்டர்" என, எழுதக்கூடாது என்று தெரிவித்தது.

ஆனால், சில பிசியோதெரபி நிபுணர்கள், மாணவர்களை தூண்டி விட்டு, சென்னை, திருச்சியில் உண்ணாவிரதம் இருக்கச் செய்கின்றனர். மொத்தமே, 360 மாணவர்கள் தான் பயில்கின்றனர். மருத்துவப் படிப்பில் 20ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். "டாக்டர்" என்று கூறுவதை, கண்டிக்கிறோம்.

தொடர்ந்து போராட்டம் நடத்தினால், அவர்களை புறக்கணிக்க தயாராக உள்ளோம். அரசு டாக்டர்களும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். டாக்டர்களையும் "டெக்னீசியன்" என, அழைப்பதில் தவறு இல்லை; ஆனால், "பிசியோதெரபிஸ்ட்"களின் தவறான கோரிக்கையை, அரசு நிறைவேற்றக்கூடாது, என்றார். மாவட்ட செயலாளர் ரமேஷ் உடனிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us