மாணவர் விசா நடைமுறை எளிதாக வேண்டும்: பிரிட்டன் தொழிலதிபர்
மாணவர் விசா நடைமுறை எளிதாக வேண்டும்: பிரிட்டன் தொழிலதிபர்
UPDATED : ஏப் 10, 2013 12:00 AM
ADDED : ஏப் 10, 2013 11:39 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: டில்லி வந்துள்ள பிரிட்டன் தொழிலதிபர் சுவராஜ் பால், "இந்திய மாணவர்களுக்கு சாதகமான வகையில், பிரிட்டனின், விசா நடைமுறை இருக்க வேண்டும்," என்றார்.
அவர் கூறியதாவது, "பல நாட்டு மாணவர்களுடன், பிரிட்டன் மாணவர்கள் கலந்து செயலாற்றும் போதுதான், அவர்களின் திறமையும் மேம்படும். ஆகவே, அனைத்து நாடுகளின் மாணவர்களுக்கும் ஏற்ற விதத்தில், பிரிட்டனின், விசா நடைமுறை இருக்க வேண்டும். சிறந்த மாணவர்கள், எளிதாக பிரிட்டன் வந்து படிக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்," என்றார்.
