அண்ணாமலை பல்கலை., தொலைத்தூர கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு
அண்ணாமலை பல்கலை., தொலைத்தூர கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு
UPDATED : ஏப் 11, 2013 12:00 AM
ADDED : ஏப் 11, 2013 08:45 AM
அ நிறம் | அளவு
தொலைத்தூர கல்வி தேர்வு கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் ரகுபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலை தூர கல்வி மையம் மூலம் டிசம்பர் 2012ல் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் இளம் கலை, முதுகலை வகுப்புகள் மற்றும் டிப்ளமோ வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடப்பிரிவுகளின் தேர்வு முடிவுகள் நேற்று (10ம் தேதி) முதல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு முடிவுகள் அனைத்தும் இன்டர்நெட், வாய்ஸ் நெட் தொலைபேசி மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட உள்ளது. இதில் www.annamalaiuniversity.ac.in, www.kalvimalar.com ஆகிய இணையதளத்தில் காணலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
