தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திரிணமுல் காங்கிரஸ் தாக்குதல்: கோல்கட்டா பல்கலையில் வேலை நிறுத்தம்

திரிணமுல் காங்கிரஸ் தாக்குதல்: கோல்கட்டா பல்கலையில் வேலை நிறுத்தம்

திரிணமுல் காங்கிரஸ் தாக்குதல்: கோல்கட்டா பல்கலையில் வேலை நிறுத்தம்


UPDATED : ஏப் 12, 2013 12:00 AM

ADDED : ஏப் 12, 2013 07:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 12, 2013 12:00 AM ADDED : ஏப் 12, 2013 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரால் தாக்குதலுக்கு உள்ளான கோல்கட்டா பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில், நேற்று, மாணவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் குறித்து "விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என, பல்கலை துணை வேந்தர், மாளவிகா சர்க்கார் வலியுறுத்தியுள்ளார்.

மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் டில்லி சென்றிருந்தார். மேற்கு வங்கத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என, பிரதமர், நிதியமைச்சர் மற்றும் திட்டக்கமிஷன் துணைத் தலைவரை சந்தித்து கோரிக்கை விடுக்க முடிவு செய்திருந்தார்.

டில்லி, விஞ்ஞான் பவனில், திட்டக்கமிஷன் துணைத் தலைவர், மான்டேக் சிங் அலுவாலியாவை சந்திக்க, மம்தா சென்ற போது, மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பினரால் முற்றுகையிடப்பட்டார். மம்தாவுடன் வந்திருந்த, மேற்கு வங்க நிதியமைச்சர், அமீத் மித்ராவும் தாக்கப்பட்டார்.

இதை அறிந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர், மேற்கு வங்கத்தில், பயங்கர வன்முறையில் இறங்கியதாக கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மாணவர் அமைப்பினரின் அலுவலகங்களையும், கட்சியினரையும் தாக்கினர்.

கோல்கட்டாவில் உள்ள பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் உள்ளே நுழைந்தவர்கள், ஆய்வகங்களை சூறையாடினர்; எதிரணி மாணவர்களை தேடிப்பிடித்து அடித்து உதைத்தனர்; மாணவியரையும் அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. திரிணமுல் கட்சி கொடியுடன் வந்த அவர்களை, போலீசார் கண்டு கொள்ளவில்லை.

இதை கண்டித்து, அந்த பல்கலையில் நேற்று, மாணவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்து, ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

பல்கலை துணைவேந்தர், மாளவிகா சர்க்கார் கூறியதாவது: திரிணமுல் கொடியுடன் வந்த கும்பல், வன்முறை வெறியாட்டம் நடத்தியது. இதுகுறித்து, முழு அளவில் விசாரிக்க, முதல்வர், மம்தா உத்தரவிட வேண்டும். இது குறித்து நான், கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை, நானும் மாணவர்களுடன் சேர்ந்து போராடுவேன்; நானும் இந்தக் கல்லூரியில் படித்தவள் தான்; இது போன்ற தாக்குதலை இதுவரை கண்டதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மாணவியர் சிலர், கண்ணீர் மல்க கூறுகையில், "வகுப்பறைக்குள் நுழைந்தவர்கள், எங்களை சீண்டினர்; சத்தம் போட்டாலோ, வெளியே சென்றாலோ, பலாத்காரம் செய்து விடுவோம் என மிரட்டினர்; தட்டிக் கேட்ட மாணவியரை, அடித்து காயப்படுத்தினர்" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us