தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘கேஸ்ட்ரோ பியஸ்டா 2008’ மருத்துவ மாநாடு துவக்க விழா

‘கேஸ்ட்ரோ பியஸ்டா 2008’ மருத்துவ மாநாடு துவக்க விழா

‘கேஸ்ட்ரோ பியஸ்டா 2008’ மருத்துவ மாநாடு துவக்க விழா


UPDATED : நவ 10, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
மெட் இந்தியா சிறப்பு மருத்துவ நிறுவனம் சார்பில், ‘கேஸ்ட்ரோ பியஸ்டா 2008’ மருத்துவ மாநாடு மற்றும் மெடிந்தியா ஆராய்ச்சி நிறுவனம் (மெட்ரெப்) ஆகியவற்றின் துவக்க விழா சென்னையில் நவ., 9ம் தேதி நடந்தது.
விழாவில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் மாநாட்டையும், ஆய்வு நிறுவனத்தையும் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மருத்துவர்கள் அனைவரும் ஸ்டெம் செல் மருத்துவத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஸ்டெம் செல்கள் தொப்புள் கொடி ரத்தத்திலிருந்தும், எலும்பு மஜ்ஜையிலிருந்தும் எடுக்கப்படுகின்றன. இதில் தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்களைப் பாதுகாப்பதற்கான ரத்த வங்கி தற்போது மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் பல்வேறு திட்டங்கள் தனியார் துறையினருடன் இணைந்து செயல்படுத்தப்படுகின்றன. டாக்டர் சந்திரசேகர் முதலியோர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வுப் படிப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பட்ட மேற்படிப்பு படித்து வருபவர்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு மீர் முஸ்தபா உசேன் பேசினார்.
விழாவில் மெட் இந்தியா சிறப்பு மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சந்திரசேகர், தரமணி டாக்டர் ஏ.எல்.எம்., முதுநிலை அடிப்படை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயராமன், மெட் இந்தியா ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர் அகமது அலி, மெட் இந்தியா அகடமியின் ஆலோசகர் ரகுராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us