தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஹெய்தி பள்ளி விபத்து: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

ஹெய்தி பள்ளி விபத்து: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

ஹெய்தி பள்ளி விபத்து: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு


UPDATED : நவ 10, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


போர்ட் ஆப் பிரின்ஸ்:
மத்திய அமெரிக்க நாடான ஹெய்தியில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
ஹெய்தி தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் புறநகரில் உள்ள பள்ளியின் மூன்றடுக்கு கட்டடம் நவ., 8ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. 700க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியின் கட்டடம் இடிந்து விழுந்ததில் 50க்கும் அதிகமானவர்கள் உடல் நசுங்கி பலியாயினர்.
இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கி பலத்த காயமடைந்துள்ளதால் இறந்தவர்கள் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. 124 மாணவர்கள் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் சில மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரோடு இருப்பதாகவும், அவர்களுக்கு பிஸ்கெட் மற்றும் தண்ணீர் இடிபாடுகளுக்கிடையே கொடுக்கப்பட்டு வருவதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த கட்டடத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us