‘ஜெயித்துக் காட்டுவோம்’: கிராமப்புற மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
‘ஜெயித்துக் காட்டுவோம்’: கிராமப்புற மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
UPDATED : நவ 10, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூரில் நடந்த தினமலர் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில் குக்கிராமங்களைச் சேர்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்காக தினமலர் சார்பில் ஆண்டுதோறும் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உத்திரமேரூரில் முதன் முறையாக 10ம் வகுப்பு மாணவர்களுக்காக ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் காட்டுப்பாக்கம், ஆனம்பாக்கம், களியப்பேட்டை, பட்டா, கம்மாளம்பூண்டி, எல்.எண்டத்தூர், இரும்பேடு, எலப்பாக்கம், ராமாபுரம், தொழுப்பேடு, சாலவாக்கம், ஒரக்காட்டுப்பேட்டை, சின்னமாகுளம், காட்டுக்கொல்லை, மெய்யூர்ஓடை, ரெட்டமங்களம், மல்லியங்கரனை, திருப்புலிவனம், களியாம்பூண்டி, மானாம்பதி கண்டிகை, ராவத்தநல்லூர்கண்டிகை, மானாம்பதி, பெருநகர், கொடுங்காலூர், மாகறல், சீத்தஞ்சேரி உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
