தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காஞ்சிபுரம் நிகழ்ச்சியில் குவிந்தனர் பள்ளி மாணவ மாணவியர்!

காஞ்சிபுரம் நிகழ்ச்சியில் குவிந்தனர் பள்ளி மாணவ மாணவியர்!

காஞ்சிபுரம் நிகழ்ச்சியில் குவிந்தனர் பள்ளி மாணவ மாணவியர்!


UPDATED : நவ 10, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் நடந்த தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் அரங்கம் நிரம்பி வழிந்தது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி என்பதை விளக்குவதற்காகவும், மாணவர்களிடையே தேர்வு பயத்தை நீக்கவும் தினமலர் சார்பில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் எட்டாவது ஆண்டாக நவ., 8ம் தேதி ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிகாலையிலே மாணவ, மாணவிகள் ரயில்வே ரோடில் உள்ள அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் குவிந்தனர்.
ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் நீண்ட வரிசையில் அணிவகுத்தனர். காலை 6.55 மணிக்கு அரங்கத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு எழுதிய ‘ஜெயித்துக் காட்டுவோம்’ எனற வழிகாட்டி புத்தகம், தேர்வில் வரும் முக்கிய வினாக்கள், புளூ பிரின்ட் புத்தகம், உடல் நலம் பாதுகாப்பு குறித்த புத்தகம், குறிப்பெடுக்க நோட்டு, பேனா ஆகியவை வழங்கப்பட்டன.  பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுதலாக தினமலரின் கம்ப்யூட்டர் சிறப்பிதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியர் அரங்கம் உள்ளே வரிசையாக அமர வைக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் அரங்கம் நிறைந்தது. அரங்கம் வெளியே அமைக்கப்பட்டிருந்த பந்தலிலும் மாணவர்கள் நிரம்பினர். அதற்கு மேல் இடம் இல்லாததால் அரங்கிற்கு வந்த மாணவர்கள் தினமலர் சார்பில் வழங்கப்பட்ட புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு வெளியில் நின்று குறிப்பெடுத்தனர்.
காலை 7.40 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. சென்னையைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் ஆனந்தன், சமூக அறிவியல் ஆசிரியர் யுவராஜ், ஆங்கில ஆசிரியர் ஆனந்தன், தமிழாசிரியர் ராஜகோபால், கணித ஆசிரியர் கேசவன் ஆகியோர் ஒவ்வொரு பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெறுவது எப்படி என தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
பிளஸ் 2 மாணவர்கள்: பகல் 11.30 மணிக்கு 10ம் வகுப்பு நிகழ்ச்சி முடிந்தது. அதைத் தொடர்ந்து வரியைõக அணிவகுத்து நின்ற பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். பகல் 12 மணிக்கு பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சி துவங்கியது.
இயற்பியல் ஆசிரியர் கோபி ஆனந்தன், வேதியியல் ஆசிரியர் பாலசுப்பிரமணியன், கணித ஆசிரியர் பத்மநாபன், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆசிரியர் கனகசபை, கம்ப்யூட்டர் அறிவியல் ஆசிரியர் ரமேஷ், வணிகவியல் ஆசிரியர் சீனிவாசன், கணக்குப் பதிவியல் ஆசிரியர் ஸ்ரீராமன், பொருளாதார ஆசிரியர் சீனிவாசன், வணிகக்கணிதம் ஆசிரியர் பத்மநாபன் ஆகியோர் ஒவ்வொரு படத்திலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெறும் வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.
போலீஸ் டி.எஸ்.பி., சமுத்திரகனி, இன்ஸ்பெக்டர் பாலு தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us