தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரஷ்ய கல்வி விழிப்புணர்வு முகாம்

ரஷ்ய கல்வி விழிப்புணர்வு முகாம்

ரஷ்ய கல்வி விழிப்புணர்வு முகாம்


UPDATED : ஏப் 15, 2013 12:00 AM

ADDED : ஏப் 15, 2013 02:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 15, 2013 12:00 AM ADDED : ஏப் 15, 2013 02:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ரஷ்ய அறிவியல் மற்றும் கலாசார மையம் சார்பில், ரஷ்ய கல்வி விழிப்புணர்வு முகாம், அவிநாசி ரோடு ரெசிடென்சி ஓட்டலில் நேற்று நடந்தது.

ரஷ்யாவின் முக்கிய நகரங்களான மாஸ்கோ, வோல்கோகிராட், செயின்பீட்டர்ஸ்பர்க், துவோ, ஸ்தவர்ரோபால், ரஸ்தோவ் போன்றவற்றில் உள்ள மருத்துவ மற்றும் பொறியியல் பல்கலைகளின் மாணவர் சேர்க்கை மற்றும் படிப்பின் தரம் குறித்து விவரிக்கப்பட்டது. கோவை மட்டுமின்றி, ஊட்டி மற்றும் திருப்பூரிலும் இந்நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று விளக்கம் பெற்றனர்.

ரஷ்ய அறிவியல் மற்றும் கலாசார மையத்தின் மாணவ ஆலோசகர் செய்யது அலி கூறியதாவது:
கல்வி தரத்தில் ரஷ்யா முதன்மை பெற்று விளங்குகிறது. ஏனெனில் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை அளித்து வருகிறது. இந்தியாவில் இருப்பதை போன்று, ரஷ்ய பல்கலைகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு, நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.

அதனால், பிளஸ்2 வகுப்பில் பெறும் மதிப்பெண் பொறுத்து, மாணவர் சேர்க்கை நடக்கிறது. மருத்துவ படிப்புக்கு, பிளஸ்2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 50 சதவீதம், பொறியியல் படிப்புக்கு 40 சதவீதம் மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும்.

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி, ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுகிறது. அந்நாட்டு மக்களிடம் பேசி, பழக ரஷ்ய மொழியும் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பல்கலை மற்றும் மொழியை பொறுத்து கல்விக்கட்டணம் மாறுபடும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us