பிளஸ் 2க்கு பின் ?: ஏப். 19, 20ல் திண்டுக்கல்லில் "தினமலர்" வழிகாட்டி
பிளஸ் 2க்கு பின் ?: ஏப். 19, 20ல் திண்டுக்கல்லில் "தினமலர்" வழிகாட்டி
UPDATED : ஏப் 16, 2013 12:00 AM
ADDED : ஏப் 16, 2013 11:12 AM
பிளஸ் 2 க்கு பின் எவ்வகை உயர்படிப்புகளை தேர்வு செய்யலாம் என்று வழிகாட்ட "தினமலர்" சார்பில் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. "தினமலர்" மற்றும் நேரு குழும கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சி முதன்முறையாக திண்டுக்கல்லில் ஏப்., 19, 20 ல் நடக்கிறது.
பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள், கண்காட்சியில் இடம்பெறுகின்றன. கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் காலை 10 முதல் இரவு 7 மணி வரை இடைவேளையின்றி திறந்திருக்கும். தினமும் காலை 10 மணி, மாலை 4 மணி என, இரு அமர்வுகளாக கருத்தரங்குகள் நடக்கிறது. கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் கல்வியாளர்கள், துறை வல்லுனர்கள் மாணவர்களுக்கான பயனுள்ள விஷயங்களை பேசுகின்றனர்.
இந்நிகழ்ச்சியை பொள்ளாச்சி பி.ஏ., பொறியியல் கல்லூரி, "பிரிஸ்க் வாட்டர்" ஆகியன இணைந்து வழங்குகின்றன. அனுமதி இலவசம்.
பெற்றோர்களே, பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள உங்களது குழந்தைகளை அழைத்து வந்து எதிர்காலத்தை வளமாக்கும், உயர்படிப்பையும், கல்வி நிறுவனத்தையும் தேர்வு செய்யுங்கள். "தினமலர்" உங்களை அன்புடன் அழைக்கிறது.
