பாரதிதாசன் பல்கலை பட்டப்படிப்பு: அரசு கல்வித் தகுதிக்கு ஏற்பு
பாரதிதாசன் பல்கலை பட்டப்படிப்பு: அரசு கல்வித் தகுதிக்கு ஏற்பு
UPDATED : ஏப் 17, 2013 12:00 AM
ADDED : ஏப் 17, 2013 07:33 AM
அ நிறம் | அளவு
சென்னை: எம்.எஸ்சி., "அப்ளைடு" கணிதம் உள்ளிட்ட, பல பட்டப் படிப்புகள், அரசு வேலைக்கு தகுதியானதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
உயர் கல்வித்துறை வெளியிட்ட அரசாணை: பாரதிதாசன் பல்கலை வழங்கும், எம்.எஸ்சி., "அப்ளைடு கணிதம்", எம்.எஸ்சி., "அப்ளிகபிள் கணிதம்", எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகள், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது.
இதே பல்கலை வழங்கும், பி.எஸ்சி., சுற்றுச்சூழல் விலங்கியல், எம்.எஸ்சி., விலங்கியல் பட்டப்படிப்பிற்கு நிகரானது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
