தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இயற்பியல் தேர்வு முறைகேட்டில் "திடுக்" தகவல்: விசாரணையில் அம்பலம்

இயற்பியல் தேர்வு முறைகேட்டில் "திடுக்" தகவல்: விசாரணையில் அம்பலம்

இயற்பியல் தேர்வு முறைகேட்டில் "திடுக்" தகவல்: விசாரணையில் அம்பலம்


UPDATED : ஏப் 17, 2013 12:00 AM

ADDED : ஏப் 17, 2013 07:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 17, 2013 12:00 AM ADDED : ஏப் 17, 2013 07:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 இயற்பியல் பொதுத்தேர்வு, மார்ச், 11ம் தேதி நடந்தது. நாமக்கல், செல்லப்பம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், தேர்வு அறையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, ஒரு மதிப்பெண் வினாக்களுக்குரிய பதில்கள், பெரிய அட்டையில் எழுதி காண்பிக்கப்பட்டது. இதை, தேர்வு கண்காணிப்பாளர் கார்மேகம் கண்டுபிடித்ததால், பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரம், ரத்து செய்யப்பட்டது.

மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இம்முறைகேடு தொடர்பாக, பள்ளி காவலாளி முருகேசன், அலுவலக உதவியாளர் செல்வக்குமார், உடற்கல்வி ஆசிரியர் யுவராஜு ஆகியோர், கைது செய்யப்பட்டனர்.

வினாத்தாள் எப்படி வெளியானது என்பது குறித்து, குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து, போலீசார் சிலர் கூறியதாவது: முறைகேட்டில் சிக்கிய தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், பிளஸ் 2 தேர்வின் போது, பிற பள்ளிகளில் கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளனர். அவர்கள், தேர்வு அறைக்கு மொபைல்போனை மறைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

தேர்வு துவங்கியவுடன், மொபைல்போன் மூலம் வினாத்தாளை படம் பிடித்து, எம்.எம்.எஸ்., மூலம் பள்ளியில் உள்ள பணியாளர்களுக்கு அனுப்பியுள்ளனர். அவை, ஒரு மதிப்பெண் வினா என்பதால், உடனடியாக அதற்கான விடை கண்டுபிடிக்கப்பட்டு, அட்டையில் எழுதி மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

அதே போல், தமிழ், ஆங்கிலத் தேர்வுகளிலும் முறைகேட்டில் ஈடுபட முயன்றுள்ளனர். தற்போது, வினாத்தாளை படம் பிடித்த ஆசிரியர், யார் என்பது தொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு கண்காணிப்பாளர் கார்மேகம் நியமித்த பணியாளர் மூலமே, தனியார் பள்ளியில் நடந்த முறைகேடு கண்டறியப்பட்டது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us