தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் வெப்சைட்டுகளுக்கு தேர்வு முடிவுகள் கிடையாது: தேர்வுத்துறை திடீர் முடிவு

தனியார் வெப்சைட்டுகளுக்கு தேர்வு முடிவுகள் கிடையாது: தேர்வுத்துறை திடீர் முடிவு

தனியார் வெப்சைட்டுகளுக்கு தேர்வு முடிவுகள் கிடையாது: தேர்வுத்துறை திடீர் முடிவு


UPDATED : ஏப் 17, 2013 12:00 AM

ADDED : ஏப் 17, 2013 09:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 17, 2013 12:00 AM ADDED : ஏப் 17, 2013 09:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த, 12 ஆண்டுகளாக, தனியார் வெப்சைட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. தேர்வுத் துறையிடம், 10 ஆயிரம் ரூபாய், கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால், தேர்வு முடிவு வெளியிடும் போது, வெப்சைட் நிறுவனங்களுக்கு, சிடி வழங்கப்படுகிறது.

மாணவர்கள், பாட வாரியாக மதிப்பெண்களுடன், தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள, தனியார் வெப்சைட்டுகள் பெரிதும் உதவுகின்றன. ஆண்டுதோறும், 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தேர்வு முடிவை வெளியிடுகின்றன. கடந்த, 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த திட்டத்தை, இந்த ஆண்டு திடீரென, தேர்வுத்துறை நிறுத்தி உள்ளது.

வழக்கமாக, தேர்வு முடிவுகளுக்கு விண்ணப்பிக்கும் வெப்சைட் நிறுவனங்களுக்கு, இந்த தகவலை, தேர்வுத்துறை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்வுத்துறையின் இந்த திடீர் முடிவால், மாணவர்களால், உடனடியாக தேர்வு முடிவை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

மேலும், தேர்வுத்துறை இணையதளத்தில் மட்டுமே, முடிவை வெளியிட்டால், ஒரே நேரத்தில், பல லட்சக்கணக்கான மாணவர்கள், முடிவை பார்க்க முயன்றால், இணையதளம், முடங்கும் ஆபத்தும் உள்ளது.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெப்சைட் நிறுவனங்களுக்கான தேர்வு கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, தமிழக அரசின் அனுமதியை கேட்டு இருந்தோம். தனியார் நிறுவனங்களில், எதற்கு தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என, கேள்வி கேட்டு, தேர்வுத் துறை இணையதளத்தில் மட்டும், வெளியிட்டாலே போதும் என, தமிழக அரசு தெரிவித்து விட்டது.

இதனால், இந்த ஆண்டு முதல், தனியார் வெப்சைட் நிறுவனங்களுக்கு, தேர்வு முடிவு வழங்கப்பட மாட்டாது. இதுகுறித்த தகவலை, சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கும் தெரிவித்து உள்ளோம். ஒரே நேரத்தில், தேர்வுத் துறை இணையதளத்தை, மாணவர்கள் பயன்படுத்தும் போது, எவ்வித பிரச்னையும் ஏற்படாத வகையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us