தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/9 ம் வகுப்பு தேர்வில் 10ம் வகுப்பு வினாக்கள்: இப்படியும் குளறுபடி

9 ம் வகுப்பு தேர்வில் 10ம் வகுப்பு வினாக்கள்: இப்படியும் குளறுபடி

9 ம் வகுப்பு தேர்வில் 10ம் வகுப்பு வினாக்கள்: இப்படியும் குளறுபடி


UPDATED : ஏப் 17, 2013 12:00 AM

ADDED : ஏப் 17, 2013 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 17, 2013 12:00 AM ADDED : ஏப் 17, 2013 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு, ஆங்கிலம் இரண்டாள் தாள் வினாத்தாளில், 10 ம் வகுப்பு பாடத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டன.

ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டு தேர்விற்கு, மாவட்ட அளவில், பொது கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது.

அதிர்ச்சி: எண் 1 முதல் 7 வரை வினாக்கள், 10ம் வகுப்பு பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன; இவற்றிக்கு 35 மதிப்பெண். மாணவர்கள் விடையளிக்க முடியாமல் குழப்பம் அடைந்தனர்.

ஆங்கில ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,"கேள்வித்தாள் தயாரித்த ஆசிரியர்கள், 10ம் வகுப்பு கேள்விகளை எடுத்துள்ளனர். ஒன்பதாம் வகுப்பு, துணைப் பாடத்தில் வினாக்கள் எடுப்பதற்கு பதிலாக, 10 ம் வகுப்பு துணைப்பாடத்தில் இருந்து, வினாக்கள் வந்துள்ளன. பொது அறிவு வினாவும், 10 ம் வகுப்பில் இருந்து கேட்கப்பட்டு உள்ளது. "எந்த வகுப்பிற்கு கேள்வி தயாரிக்கிறோம்" என, தெரியாமல் வினாத்தாள் தயாரித்து உள்ளனர்" என்றார்.

முதன்மைக் கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் கூறுகையில், "குளறுபடியான வினாத்தாளை, எப்படி எடுத்தனர் என, விசாரிக்கப்படும். மாணவர்கள் அச்சப்பட தேவை இல்லை" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us