தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி நிர்வாகிகளிடம் கட்டண நிர்ணய குழு அவசரகதியில் கருத்துகேட்பு

பள்ளி நிர்வாகிகளிடம் கட்டண நிர்ணய குழு அவசரகதியில் கருத்துகேட்பு

பள்ளி நிர்வாகிகளிடம் கட்டண நிர்ணய குழு அவசரகதியில் கருத்துகேட்பு


UPDATED : ஏப் 17, 2013 12:00 AM

ADDED : ஏப் 17, 2013 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 17, 2013 12:00 AM ADDED : ஏப் 17, 2013 11:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அடுத்த கல்வி ஆண்டு துவங்குவதற்கு, 40 நாட்கள் மட்டுமே இருப்பதால், 12 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்வதில், கட்டண நிர்ணயக் குழு, அவசரகதியில் இயங்கி வருகிறது. கட்டண நிர்ணய குழு அலுவலகத்தில், உட்காருவதற்கு கூட, போதிய வசதிகள் இல்லாத நிலையில், ஒரு நாளைக்கு, 300 பள்ளிகளின் நிர்வாகிகளை அழைத்து, மணிக் கணக்கில் காக்கவைத்து, அலைக்கழிப்பதாக, பள்ளி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, 12 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான, புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. சிங்காரவேலு தலைமையிலான குழு, தனியார் பள்ளி நிர்வாகிகளை அழைத்து, பள்ளிகளின் வருவாய்-செலவு விவரங்கள் அடங்கிய ஆவணங்களை ஆய்வு செய்து, புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது. சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள கட்டண நிர்ணய குழு அலுவலகத்தில், இரு வாரங்களுக்கும் மேலாக, இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. தனியார் பள்ளிகளின் செலவு விவரங்களை முழுமையாக பெற்று, அதனடிப்படையில், புதிய கட்டணம் நிர்ணயம் செய்வது இல்லை என்றும், மிகக் குறைவான கட்டணத்தையே, குழு நிர்ணயம் செய்கிறது என்றும், பள்ளி நிர்வாகிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இதற்கு மாறாக, தற்போது, ஒரு நாளைக்கு, 300 பள்ளி நிர்வாகிகளை அழைத்து, அவசரகதியில், பெயருக்கு, விசாரணையை நடத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை, திருநெல்வேலி, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, நேற்று, 300 பள்ளிகளின் நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த தகவலை, குழு பணியாளர்களும் உறுதிபடுத்தினர். அலுவலகத்தில் அமர்வதற்கு போதிய இட வசதி இல்லாததால், தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு செல்லும் மாடி படிக்கட்டுகளில், பள்ளி நிர்வாகிகள் உட்கார்ந்தனர். மேலும், குழு அலுவலகத்திற்குள், காற்றோட்டம் இல்லாத, இருட்டிய இடங்களில், 200க்கும் மேற்பட்டோர் உட்கார்ந்துகொண்டு, வியர்வையில் நனைந்த நிலையில், புத்தகங்களை வைத்து, விசிறிக்கொண்டு இருந்தனர்.

இது குறித்து, விசாரணைக்கு வந்த சில பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது: ஒரு நாளைக்கு 300 பேரை அழைத்தால், எப்படி, எங்கள் கருத்துக்களை முழுமையாக கேட்க முடியும். குடிப்பதற்கு தண்ணீரும் கிடையாது; உட்கார இடமும் கிடையாது. ஆட்டு மந்தைகளைப்போல், அடைத்து வைத்து, சித்ரவதை செய்கின்றனர். மணிக் கணக்கில் காத்துகிடக்க வேண்டிய அவலமும் உள்ளது. இவ்வாறு, பள்ளி நிர்வாகிகள் குமுறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us