இன்ஜினியரிங், பாலிடெக்னிக் கல்லூரிகளில் ‘ஷிப்ட்’ முறை: ஏ.ஐ.சி.டி.இ.,
இன்ஜினியரிங், பாலிடெக்னிக் கல்லூரிகளில் ‘ஷிப்ட்’ முறை: ஏ.ஐ.சி.டி.இ.,
UPDATED : நவ 14, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ‘ஷிப்ட்’ முறை கொண்டு வர, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அனுமதி அளிக்கவுள்ளது.
இக்கவுன்சிலின் அனுமதி பெற்று கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஷிப்ட் முறையை அமல்படுத்த முடியும். இது அரசு, அரசு உதவி பெறும் பாலிடெக்னிக், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.
ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் இன்ஜினியரிங் கல்லூரிகளில், இரண்டாவது ஷிப்ட்டில் பாலிடெக்னிக் வகுப்புக்களை துவங்க முடியும். இதற்கான அனுமதி பெற டிச., 31ம் தேதிக்குள் ஏ.ஐ.சி.டி.இ.,க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், பீகார், சட்டீஸ்கர், டில்லி, குஜராத், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகலாயா, மிசோரம், நாகலாந்து, ஒரிசா, ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்ரகண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதி பெற்று நான்கு ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் கல்லூரிகளில், ஷிப்ட் முறையில் இன்ஜினியரிங் வகுப்பு நடத்தவும் அனுமதி அளிக்கப்படவுள்ளது.
மேலும் விபரங்களுக்கு www.aicte.ernet.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
