புதிய இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., புதிய கட்டுப்பாடு!
புதிய இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., புதிய கட்டுப்பாடு!
UPDATED : நவ 14, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள ஒன்பது பாடங்களில் மூன்றை தேர்வு செய்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைத்ததும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஏராளமான புதிய இன்ஜி., கல்லூரிகள் முளைத்தன. இந்த கல்லூரிகளில், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ., பி.டெக்., (ஐ.டி.,) மற்றும் மெக்கானிக்கல் ஆகிய பாடப்பிரிவுகள் மட்டுமே துவக்கப்பட்டன.
அடுத்த கல்வியாண்டில் (2009-2010), தமிழகம், ஆந்திரம், கோவா, அரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் புதிதாக துவக்கப்படவுள்ள இன்ஜி., கல்லூரிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,).
இந்த மாநிலங்களில் துவக்கப்படவுள்ள புதிய கல்லூரிகள், சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், புரொடக்சன், மெட்டலர்ஜிக்கல், கெமிக்கல், ஆட்டோமொபைல், என்விரான்மென்டல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜி.,/ இ.சி.இ., ஆகிய பாடப்பிரிவுகளில் மூன்று பாடங்களை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்த கல்வியாண்டில் புதிய இன்ஜி., கல்லூரி துவக்க, டிச., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குப்பின் வரும் விண்ணப்பங்களுக்கு 2010-11ம் கல்வியாண்டிற்கான அனுமதி மட்டுமே கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு: www.aicte.ernet.in
