தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீஸ் தேர்வில் மறுமதிப்பீடு கோர முடியாது: ஐகோர்ட் ஆணை

சிவில் சர்வீஸ் தேர்வில் மறுமதிப்பீடு கோர முடியாது: ஐகோர்ட் ஆணை

சிவில் சர்வீஸ் தேர்வில் மறுமதிப்பீடு கோர முடியாது: ஐகோர்ட் ஆணை


UPDATED : நவ 14, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மறுமதிப்பீடு கோருவதை நிராகரிக்க மத்திய தேர்வாணை கமிஷனுக்கு அதிகாரம் உண்டு என்று கோர்ட்டும் ஆமோதித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., கனவுடன் சிவில் சர்வீஸ் தேர்வை பல லட்சம் பேர் ஆண்டுதோறும் எழுதுகின்றனர். மத்திய தேர்வாணைக் கமிஷன் ஆண்டுதோறும் இதற்கான தேர்வை நடத்தி வருகிறது.
பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் போல, இந்த சிவில் சர்வீஸ் தேர்விலும் மறுகூட்டலுக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் பேர் பாதிக்கப்படுவர்.
டில்லியைச் சேர்ந்தவர் கீதா சுவப்ணா; ஐ.ஏ.எஸ்., கனவுடன், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். எல்லா பாடங்களிலும் அருமையாக எழுதிய அவர், மதிப்பெண் பட்டியலை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். ஆங்கிலம் கட்டுரைத் தேர்வில் 200க்கு 64, சைக்காலஜியில் 300க்கு 126 மதிப்பெண்ணும் பெற்றிருந்தது தெரியவந்தது. சுவப்ணா உடனே, கமிஷனுக்கு கடிதம் எழுதினார்.
அவர் கடிதத்தை ஏற்று, அவர் தேர்வுத்தாளை எடுத்து, மதிப்பெண்களை  மீண்டும் கூட்டினர் அதிகாரிகள். ஆனால், மதிப்பெண் சரியாகத்தான் இருந்தது. இதை சுவப்ணாவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘நான் எல்லா பாடங்களிலும் சிறப்பாக எழுதியுள்ளேன். எனக்கு போட்ட மதிப்பெண் குறைவாக உள்ளது. அதனால், மறுமதிப்பீடு செய்ய  அனுமதிக்க வேண்டும்’ என்று மீண்டும் விண்ணப்பித்தார். ஆனால், கமிஷன் உயர் அதிகாரிகள் கைவிரித்து விட்டனர். ‘மறுகூட்டலுக்கு அனுமதிக்க விதிகளில் இடம் உள்ளது. ஆனால், மறுமதிப்பீட்டுக்கு வழியில்லை’ என்று பதில் அனுப்பியிருந்தனர்.
சுவப்ணா விடவில்லை; மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் விண்ணப்பித்தார். ‘கமிஷன் தன்னிச்சையாக என் கோரிக்கையை நிராகரித்து விட்டது; இது சட்ட விரோதமானது; என் உரிமையை பறிப்பதாக அமைகிறது’ என்று அதில் கூறியிருந்தார். ஆனால், தீர்ப்பாயமோ, ‘கமிஷன் விதிகளில் இடம் இல்லாத போது, வேண்டுகோளை ஏற்க வாய்ப்பில்லை’ என்று கூறிவிட்டது.
இதனால் வெறுத்துப் போன சுவப்ணா, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவை நீதிபதிகள் முரளீதர், சுரேஷ் கெய்த் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து, கமிஷனிடம் இருந்து பதில் பெற உத்தரவிட்டது.
‘மறுமதிப்பீட்டுக்கு விதிகளில் இடமில்லை. சில செயல்பூர்வமான காரணங்களால் மறுமதிப்பீடு செய்ய வழியில்லை’ என்று பதிலில் கமிஷன் கூறியது. இதை கோர்ட் ஏற்று, ‘தேர்வாணைய செயல்பாட்டில் எந்த குறைபாடும் கண்டுபிடிக்க முடியாது.
உங்கள் மதிப்பெண் மறுகூட்டலில் எந்த தவறும் தெரியவில்லை. ஆனால், மறுமதிப்பீடு செய்ய விதிகளில் இடம் இல்லாததால், அதை செய்ய முடியாது என்று தெரிகிறது. மறுமதிப்பீடு கோருவதை நிராகரிக்க கமிஷனுக்கு அதிகாரம் உண்டு’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us