தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 படித்தவர்கள் ரூ.1,000 சம்பளத்தில் ஆசிரியர்களாக நியமனம்

பிளஸ் 2 படித்தவர்கள் ரூ.1,000 சம்பளத்தில் ஆசிரியர்களாக நியமனம்

பிளஸ் 2 படித்தவர்கள் ரூ.1,000 சம்பளத்தில் ஆசிரியர்களாக நியமனம்


UPDATED : நவ 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கடலூர்:
கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் 1,000 ரூபாய் சம்பளத்தில் 162 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 1,400 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இடைநிலை ஆசிரியர்கள் 185 பேர் பதவி உயர்வு மற்றும் வெளி மாவட்டங்களுக்கு மாறுதலாகிச் சென்றனர். இதற்கிடையே, மாநில அளவில் பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்ற கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
செயல்வழிக் கற்றல் கற்பிக்கும் நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால், பணியில் தொய்வு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தற்காலிகமாக 1,000 ரூபாய் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பிளஸ் 2 படித்தவர்கள் மற்றும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட ‘வில்லேஜ் எஜுகேஷன் கமிட்டி’ சார்பில் தேர்வு செய்து அவர்களுக்கு சம்பளம் வழங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடந்த மாதம் முதல் இது வரை மாவட்டம் முழுவதும் 162 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்கள் அனைவரும் நிரந்தரமாக ஆசிரியர்கள் நிமிக்கப்படும் வரை பணியில் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us