தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமராவதி அணையில் படகு போட்டி: ‘சைனிக்’ மாணவர் சாதனை

அமராவதி அணையில் படகு போட்டி: ‘சைனிக்’ மாணவர் சாதனை

அமராவதி அணையில் படகு போட்டி: ‘சைனிக்’ மாணவர் சாதனை


UPDATED : நவ 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


உடுமலை:
அமராவதி  அணையில் நடந்த படகு போட்டியில், சைனிக் பள்ளி மாணவர்கள் வீர சாகசம் புரிந்தனர்.
உடுமலை அருகிலுள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில், மாணவர்களுக்கு குதிரையேற்றம், மலையேற்றம் உட்பட பல பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், சில ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கியிருந்த ‘போட் கிளப்’ புனரமைக்கப்பட்டது. வழக்கமாக பயிற்சி மட்டும் அளிக்கப்படும் ‘போட் கிளப்’பில் இந்த ஆண்டு முதல்முறையாக மாணவர்களுக்கு படகு போட்டி நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக, சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி பெற்ற மாணவர்கள் நவ. 16ம் தேதி அமராவதி அணையில் களமிறங்கினர். சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் என பிரிக்கப்பட்டிருந்த அணிகளின் கீழ் தலா இரு படகுகள் கலந்து கொண்டன.
பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிக எடை இல்லாத ‘பைபர் போட்’களில் இரண்டு மாணவர்கள் தங்கள் இலக்கை நோக்கி,  துடுப்புகளுடன் வெற்றிக்காக போராடினர்.
அணையின் மேற்கு கரையிலிருந்து கிழக்கு கரை வரை சென்று திரும்ப வேண்டும். வெற்றி பெற  1.5 கி.மீ., தூரத்துக்கு  இடைவெளி இல்லாமல் மாணவர்கள் படகு செலுத்த வேண்டும். போட்டியை பள்ளியின் முதல்வர் கர்னல் சாமுவேல் துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக நான்கு படகுகள் போட்டியில் பங்கேற்றன. வெற்றி இலக்கை நோக்கி மாணவர்கள் அமாரவதி அணையில் துடுப்புகளின் உதவியுடன் தண்ணீரை கிழித்தபடி படகை செலுத்தினர். கடும் போட்டிக்கு பிறகு ‘சிங்கிள் போட்’ பிரிவில் சோழா ‘பி’ அணியின் குருபிரசாத், சக்திபிரகாஷ் ஆகியோர் 13.28 நிமிடத்தில் பந்தய தூரத்தை எட்டி வெற்றி பெற்றனர். ஒட்டுமொத்த சாம்பியனாக பாண்டியர் அணி 29.52 நிமிடத்தில் கரையை தொட்டு வெற்றி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us